கீரை சோயா கூட்டு
தேவையானவை: பாசிப்பருப்பு-அரைகப், முளைக்கீரை-ஒரு கட்டு, சோயா உருண்டைகள்-5 அல்லது6, சின்ன வெங்காயம்-4, பூண்டு-4 பல், பச்சை மிளகாய்-2, மஞ்சள்தூள்-கால் டீஸ்பூன்,உப்பு-தேவையான அளவு.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு-அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய்-2,எண்ணெய்-2 டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை மலர வேகவைத்துக் கொள்ளுங்கள். கீரையைப் பொடியாக நறுக்கி,சிறிது உப்பு சேர்த்து, குக்கரில் அரை கப் தண்ணீரும் சேர்த்து, ஒரு விசில் வைத்து இறக்குங்கள்.பிறகு, பிரஷரை வெளியேற்றி, மூடியைத் திறந்தால் கீரை நிறம் மாறாமல் இருக்கும்.சோயா உருண்டைகளை 2 டம்ளர் கொதிக்கும் நீரில் போட்டு, 5 நிமிடம் கழித்து எடுத்து,தண்ணீரில் 2 முறை போட்டு அலசிப் பிழிந்து, பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். சின்னவெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். வெந்த பருப்புடன்,வெங்காயம், பச்சை மிளகாய், சோயா சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம்கொதிக்கவிட்டு கீரை சேருங்கள். இதை 2 நிமிடம் கொதிக்கவிட்டு, எண்ணெயில் கடுகு,உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டி இறக்குங்கள். சப்பாத்தி, சாதத்துக்கு சுவைசேர்க்கும் கூட்டு இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கீரை சோயா கூட்டு, 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, சேர்த்து, மிளகாய், டீஸ்பூன், பச்சை, பொடியாக, கொள்ளுங்கள், உப்பு, சோயா, Recipies, சமையல் செய்முறை