இளங்கூட்டு
தேவையானவை: அவரை, கத்திரி, பூசணி, பரங்கி, காராமணி, கொத்தவரை (எல்லாம் கலந்து)பொடியாக நறுக்கியது-ஒரு கப், பாசிப்பருப்பு-அரை கப், பெரிய வெங்காயம்-1, பச்சை மிளகாய்-2,பால்-அரை கப், சீரகம்-அரை டீஸ்பூன், மஞ்சள்தூள்-கால் டீஸ்பூன், கறிவேப்பிலை-சிறிதளவு.
செய்முறை: பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து (பாத்திரத்தில்) மலர வேக வையுங்கள். வெங்காயத்தைபொடியாக நறுக்கி, பச்சை மிளகாயைக் கீறுங்கள். நறுக்கிய காய்கறிக் கலவையுடன் சிறிது உப்பு,அரை கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைத்து இறக்குங்கள். 2 நிமிடம்கழித்து விசிலை எடுத்து பிரஷரை வெளியேற்றிவிட்டு மூடியைத் திறந்து, வெந்த காய்களுடன்பருப்பை சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடுங்கள். 5 நிமிடம் கொதித்ததும், சீரகம், கிள்ளியகறிவேப்பிலை, பால் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் நெய்சேர்க்கலாம். வயிற்றுக்குக் கெடுதல் செய்யாத, சத்தான இளங்கூட்டு இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இளங்கூட்டு, 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, சேர்த்து, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை