தவா கட்லெட்
தேவையானவை: கேரட்-1, பீட்ரூட்-1, முட்டைகோஸ்-100 கிராம், பீன்ஸ்-10, உருளைக்கிழங்கு(விருப்பப்பட்டால்)-1, இஞ்சி -ஒரு துண்டு, பூண்டு-4 பல், பச்சைமிளகாய்-3, கரம்மசாலாதூள்(விருப்பப்பட்டால்)-அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை-கால் கப், மல்லித்தழை-சிறிதளவு,உப்பு-தேவையான அளவு, எலுமிச்சம்பழச் சாறு-ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய்-சிறிதளவு.
செய்முறை: கேரட், பீட்ரூட் இரண்டையும் தோல்சீவித் துருவிக் கொள்ளுங்கள். கோஸையும்,பீன்ஸையும் மிகவும் பொடியாக நறுக்குங்கள். இட்லிப் பாத்திரத்தில் ஒரு தட்டில் துருவிய காய்களைபரவலாக வைத்து, 10 முதல் 15 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து இறக்குங்கள். இஞ்சி, பூண்டு,பச்சைமிளகாய், மல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி, வேகவைத்த காய்கறிகளுடன்சேர்த்துக் கலக்குங்கள். அத்துடன் உப்பு, எலுமிச்சம்பழச் சாறு, கரம் மசாலாதூள், பொட்டுக்கடலைபொடித்த தூள்.. எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்குசேர்ப்பதாக இருந்தால் வேகவைத்து, மசித்துச் சேர்த்துப் பிசையுங்கள்.எல்லாவற்றையும் நன்கு பிசைந்து வேண்டிய வடிவத்தில் செய்து, தோசைக் கல்லைக் காயவைத்து,அதன்மேல் நான்கைந்து கட்லெட்டுகளாகப் பரப்புங்கள். சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு, பிறகுதிருப்பிவிட்டு வேகவிட்டெடுங்கள்.குறிப்பு: கேரட், பீட்ரூட்டை விலக்க நினைப்பவர்கள், அதற்கு பதிலாக துருவிய காலிஃப்ளவர்,துருவிய முள்ளங்கி சேர்த்துச் செய்யலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தவா கட்லெட், 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, துருவிய, கேரட், Recipies, சமையல் செய்முறை