அவிச்ச குழம்பு

தேவையானவை: பரங்கிக்காய்-ஒரு துண்டு, அவரை, காராமணி, கொத்தவரை, கத்தரி,வாழைக்காய், மொச்சை (எல்லாம் சேர்த்து)-கால்கிலோ, பெரிய வெங்காயம்-1, தக்காளி-3,புளி-எலுமிச்சை அளவு, மிளகாய்தூள்-2 டீஸ்பூன், தனியாதூள்-ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள்-கால்டீஸ்பூன், பூண்டு-8 முதல் 10 பல், கறிவேப்பிலை-சிறிதளவு, மல்லித்தழை-சிறிதளவு,உப்பு-தேவையான அளவு.தாளிக்க: எண்ணெய்-2 டீஸ்பூன், கடுகு, சோம்பு, வெந்தயம், சீரகம்-தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்குங்கள். புளியை 4 கப் தண்ணீரில் கரைத்து,வடிகட்டி அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடுங்கள். கொதிக்கும் புளித்தண்ணீரில் நறுக்கிய காய்கறிகள்,மிளகாய்தூள், தனியாதூள், உப்பு, மஞ்சள்தூள் சேருங்கள். பூண்டை தோல் உரித்து நசுக்கிச் சேர்த்து,எல்லாம் சேர்ந்து வேகும் வரை கொதிக்கவிடுங்கள். பிறகு எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும்பொருட்களை சேர்த்து, சிவந்ததும் குழம்பில் சேருங்கள். அத்துடன் கறிவேப்பிலை, மல்லித்தழைகிள்ளிச் சேர்த்து இறக்குங்கள்.குறிப்பு: இதையே குக்கரிலும் செய்யலாம். 2 கப் தண்ணீரில், புளியைக் கரைத்து வடிகட்டி, மிளகாய்தூள், உப்பு, மஞ்சள் தூள், நசுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி காய்கறிகள், உப்பு சேர்த்துகுக்கரில் வைத்து, ஒரு விசில் வரும்வரை வைத்து இறக்குங்கள். பிறகு, தாளித்துக்கொட்டி, சிறிதுவற்றியதும் இறக்கினால் குழம்பு ரெடி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவிச்ச குழம்பு, 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, டீஸ்பூன், சேர்த்து, உப்பு, மிளகாய்தூள், Recipies, சமையல் செய்முறை