வாழைக்காய் பொடிக்கறி

தேவையானவை: வாழைக்காய்-2, புளி-நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள்-அரை டீஸ்பூன்,உப்பு-தேவையான அளவு.வறுத்து பொடிக்க: காய்ந்த மிளகாய்-5, தனியா-ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு-ஒரு டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கொப்பரை துருவல் - ஒரு டீஸ்பூன், எண்ணெய்-ஒரு டீஸ்பூன்.தாளிக்க: கடுகு-அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு-ஒரு டீஸ்பூன், எண்ணெய்-2 டீஸ்பூன்,கறிவேப்பிலை-சிறிது, பெருங்காயம்-அரை டீஸ்பூன்.
செய்முறை: வாழைக்காயை கழுவி இரண்டாக நறுக்குங்கள். புளியை 2 கப் தண்ணீரில் கரைத்துவடிகட்டி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதி வந்ததும், வாழைக்காயைச் சேருங்கள். வாழைக்காய்முக்கால் பதம் வெந்ததும் எடுத்து தோலுரித்து, புட்டு துருவியால் துருவிக் கொள்ளுங்கள்.வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்கவறுத்து, பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து வாழைக்காய், உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறி பொடியைதூவி நன்கு கிளறி இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாழைக்காய் பொடிக்கறி, 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, உப்பு, Recipies, சமையல் செய்முறை