பேல் பூரி
தேவையானவை: பொரி-2 கப், துருவிய வெள்ளரி, பெரிய வெங்காயம், கேரட், பீட்ரூட்,முள்ளங்கி-தலா ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல்-2 டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு-ஒருடேபிள்ஸ்பூன், மல்லித்தழை (பொடியாக நறுக்கியது)-ஒரு டேபிள்ஸ்பூன், மாங்காய்துருவல்-ஒருடேபிள்ஸ்பூன், தக்காளி (பொடியாக நறுக்கியது)-ஒரு டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை-ஒருடேபிள்ஸ்பூன்.அரைக்க: பச்சைமிளகாய்-3, புளி-சுண்டைக்காய் அளவு, பூண்டு-3 பல், இஞ்சி-சிறு துண்டு,உப்பு-தேவையான அளவு, எண்ணெய்-3 டீஸ்பூன்.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்தெடுங்கள். எண்ணெயைக்காயவைத்து, அரைத்த விழுதைப் போட்டு குறைந்த தீயில் பச்சை வாசனை போக வதக்குங்கள்.பொரியுடன் எல்லாக் காய்கறிகளையும் அரைத்த விழுதையும் சேர்த்து நன்றாகக் கலக்கி,பொட்டுக்கடலையையும் சேர்த்து, உடனே பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பேல் பூரி, 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, ஒருடேபிள்ஸ்பூன், டேபிள்ஸ்பூன், Recipies, சமையல் செய்முறை