கொத்தமல்லி சூப்
தேவையானவை: பாசுமதி அரிசி-2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம்-1, பூண்டு-6 பல்,மஞ்சள்தூள்-கால் டீஸ்பூன், தேங்காய்ப்பால்-கால் கப், எலுமிச்சம்பழச்சாறு(விருப்பப்பட்டால்)-ருசிக்கேற்ப, உப்பு-தேவையான அளவு.அரைக்க: மல்லித்தழை-2 கைப்பிடி, புதினா-10 இலை, தனியாதூள்-2 டீஸ்பூன், பச்சை மிளகாய்-1,பூண்டு-2 பல்.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். 5 கப்தண்ணீரை கொதிக்க வையுங்கள். அதில் பாசுமதி அரிசியைக் கழுவிச் சேருங்கள். அரைத்த விழுதைஒரு சிறிய துணியில் மூட்டையாகக் கட்டி அதனையும், தண்ணீருக்குள் போடுங்கள். தேவையானஉப்பு சேர்த்து, சிறிய தீயில் வைத்து அரிசி நன்கு வேகும் வரை கொதிக்க விடுங்கள். அரிசி நன்குவெந்ததும் இறக்கி வைத்து, தேங்காய்ப்பாலை சேர்த்து, 2 டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து,பொடியாக நறுக்கிய பூண்டைச் சேர்த்து வதக்கி, சூப்பில் சேர்த்து, நன்கு கலந்து பரிமாறுங்கள்.(காய்கறிகள் சேர்க்க விரும்பினால், பாசுமதி அரிசியைப் பாதியாகக் குறைத்துக்கொண்டு, அத்துடன்கேரட், பீன்ஸ், கோஸ், காலிஃப்ளவர் நறுக்கிப் போட்டு வேகவிட்டு சூப் செய்யலாம்).
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொத்தமல்லி சூப், 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, சேர்த்து, டீஸ்பூன், அரிசி, பாசுமதி, Recipies, சமையல் செய்முறை