சோயா பனீர்
தேவையானவை: கோதுமை மாவு-2 கப், உப்பு-தேவையான அளவு, எண்ணெய்-சிறிதளவு.
பூரணத்துக்கு: சோயா பனீர் (தொஃபு) - 200 கிராம், துருவிய வெங்காயம்-ஒரு டேபிள்ஸ்பூன்,துருவிய கேரட்-ஒரு டேபிள் ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை-ஒரு டேபிள்ஸ்பூன், கரம்மசாலாதூள்-அரை டீஸ்பூன், மிளகாய்தூள்-அரை டீஸ்பூன், சீரகத்தூள்-அரை டீஸ்பூன், மிகவும்பொடியாக நறுக்கிய பூண்டு (விருப்பப்பட்டால்)-ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு-ஒருடேபிள்ஸ்பூன், உப்பு-தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து சற்று மிருதுவாகப் பிசைந்துவையுங்கள். பனீரைத் துருவிக் கொள்ளுங்கள். பூரணத்துக்கான மற்ற பொருட்களுடன் ஒன்றாகச்சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள். மாவை சிறிதளவு எடுத்து, கிண்ணம் போல செய்து,பூரணத்தை நிரப்பி, சற்று கனமான சப்பாத்தியாகத் திரட்டி, எண்ணெய் தடவி, தோசைக்கல்லில்சுட்டெடுங்கள். தயிர் அல்லது ஊறுகாய் சேர்த்துச் சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோயா பனீர், 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, டீஸ்பூன், தேவையான, உப்பு, Recipies, சமையல் செய்முறை