அவல் புளி உப்புமா
தேவையானவை: அவல்-ஒரு கப், புளி-சிறிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள்-அரை டீஸ்பூன்,பெருங்காயத்தூள்-அரை டீஸ்பூன், வெல்லம் (விருப்பப்பட்டால்)-ஒரு சிறிய துண்டு,கறிவேப்பிலை-சிறிதளவு, துவரம்பருப்பு-ஒரு டேபிள்ஸ்பூன்.
வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய்-4, கடலைப்பருப்பு-2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு-ஒருடீஸ்பூன், தனியா-ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல்-(விருப்பப்பட்டால்)-2 டீஸ்பூன். தாளிக்க:கடுகு-அரை டீஸ்பூன், கறிவேப்பிலை-சிறிதளவு, எண்ணெய்-2 டீஸ்பூன்
செய்முறை: புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதனுடன் மஞ்சள்தூள், உப்பு,பெருங்காயம், அவல் சேர்த்துப் பிசறி, ஊற வையுங்கள். ஒன்றரை மணி நேரம் ஊறட்டும். வறுக்கக்கொடுத்துள்ள பொருட்களை நன்கு சிவக்க வறுத்து பொடித்துக் கொள்ளுங்கள். துவரம்பருப்பை,குழையாமல் நெத்துப் பருப்பாக வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள். ஊறியஅவலுடன், வறுத்துப் பொடித்த பொடி, வேகவைத்த பருப்பு, பொடித்த வெல்லம் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டிக் கிளறிபரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவல் புளி உப்புமா, 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, டீஸ்பூன், கறிவேப்பிலை, Recipies, சமையல் செய்முறை