பேபிகார்ன் தவாஅ ஃப்ரை
தேவையானவை: பேபிகார்ன் - 10, இஞ்சி+பூண்டுவிழுது - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாதூள்-அரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார்-ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு-ஒரு டேபிள்ஸ்பூன்,உப்பு-தேவையான அளவு, பிரெட் தூள்-தேவைக்கேற்ப, எண்ணெய்-சிறிதளவு, மிளகாய்தூள்-ஒருடீஸ்பூன்.
செய்முறை: பேபிகார்னுடன் இஞ்சி+பூண்டு விழுது, மிளகாய்தூள், கரம் மசாலாதூள், எலுமிச்சம்பழச்சாறு, உப்பு சேர்த்து பிசறி, முதல் இரண்டு மணி நேரம் வரை ஊறவிடுங்கள். ஊறிய பிறகு, கார்ன்ஃப்ளார் சேர்த்துப் பிசறுங்கள். தோசைக்கல்லைக் காயவைத்து, பிசறிய பேபிகார்ன்களை ஒவ்வொன்றாக பிரெட் தூளில் புரட்டியெடுத்து, தவாவில் அடுக்குங்கள். சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் விட்டு, அவ்வப்போது நன்கு புரட்டிவிட்டு, எல்லாப் பக்கமும் நன்கு வெந்தபின்,சூடாகப் பரிமாறுங்கள். சாஸ், இதற்கு நல்ல காம்பினேஷன். மழைக்காலத்தில் சூடாகச் சாப்பிட ஏற்ற சுவையான அயிட்டம் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பேபிகார்ன் தவாஅ ஃப்ரை, 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, , Recipies, சமையல் செய்முறை