முருங்கை சூப்
தேவையானவை: துவரம்பருப்பு-அரை கப், முருங்கைக்காய்-2, பெரிய வெங்காயம்-1, தக்காளி-3,பச்சை மிளகாய்-2, இஞ்சி-ஒரு துண்டு, பூண்டு-4 பல், மல்லித்தழை-ஒரு கைப்பிடி,மஞ்சள்தூள்-கால் டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு, தேங்காய்ப்பால்-அரை கப் அல்லதுஎலுமிச்சம்பழச் சாறு-புளிப்புச் சுவைக்கேற்ப.வறுத்துப்பொடிக்க: மிளகு-கால் டீஸ்பூன், சோம்பு-கால் டீஸ்பூன், சீரகம்-கால் டீஸ்பூன்.
செய்முறை: பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேக வையுங்கள். வெங்காயம், தக்காளியைப்பொடியாக நறுக்குங்கள். முருங்கைக்காயை 3 அங்குலத் துண்டுகளாக நறுக்கிவையுங்கள். வறுத்துப்பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாக வறுத்துப் பொடியுங்கள். இஞ்சி, பூண்டை தோல்நீக்கி நசுக்கிக் கொள்ளுங்கள்.வெந்தபருப்பில் 2 கப் தண்ணீர், காய்கள், வறுத்துப் பொடித்த பொடி, இஞ்சி, பூண்டுஎல்லாவற்றையும் ஒன்றாக குக்கரில் போட்டு 2 விசில் வைத்து இறக்குங்கள். பிரஷர் அடங்கியதும்ஒரு வடிகட்டியில் நன்கு வடிகட்டுங்கள். விருப்பம் போல தேங்காய்ப்பால் அல்லது எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துப் பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முருங்கை சூப், 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, டீஸ்பூன், கால், இஞ்சி, Recipies, சமையல் செய்முறை