சிம்பிள் சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு-அரை கப், விருப்பமான காய்கறி ஏதேனும்-100 கிராம், தக்காளி-2,சாம்பார் பொடி-2 டீஸ்பூன், பெருங்காயம்-அரை டீஸ்பூன், புளி-நெல்லிக்காய் அளவு,உப்பு-தேவையான அளவு, மஞ்சள்தூள்-கால் டீஸ்பூன்.தாளிக்க: கடுகு-அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு-அரை டீஸ்பூன், வெந்தயம்-கால் டீஸ்பூன்,எண்ணெய்-2 டீஸ்பூன்.
செய்முறை: பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவையுங்கள். அத்துடன் காய்கறிகளைநறுக்கிச் சேர்த்து, தக்காளி, உப்பு, சாம்பார் பொடி, பெருங் காயத்தூள் சேர்த்து, காய் வெந்ததும்புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து, அதனுடன் சேருங்கள். பச்சை வாசனை போனதும்எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, பொன்னிறமானதும் சாம்பாரில்சேருங்கள். அத்துடன் கறிவேப்பிலை, மல்லித்தழை சேருங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிம்பிள் சாம்பார், 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, டீஸ்பூன், சேர்த்து, Recipies, சமையல் செய்முறை