கீரை கட்லெட்
தேவையானவை: முளைக்கீரை (பொடியாக நறுக்கியது)-ஒரு கப், கடலைமாவு-அரை கப், பெரியவெங்காயம்-1, பச்சை மிளகாய்-2, பூண்டு-3 பல், இஞ்சி-ஒரு சிறிய துண்டு, மல்லித்தழை-சிறிதளவு,எண்ணெய்-தேவையான அளவு, உப்பு-தேவையான அளவு.
செய்முறை: கீரையை உப்பு, கால் கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து எடுங்கள்.(அதிகப்படியான தண்ணீரை வடித்து ரசம் அல்லது சாம்பாரில் சேர்க்கலாம்). வெங்காயம், மிளகாய்,பூண்டு, இஞ்சி, மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து,வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி, மல்லித்தழை சேர்த்து வதக்கி அத்துடன், வெந்தகீரையையும் சேர்த்து வதக்குங்கள். கடலைமாவுடன் தேவையான தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து,இட்லி மாவு பதத்துக்கு கரையுங்கள். இதனைக் கீரையுடன் சேர்த்து சிறு தீயில் நன்கு கிளறுங்கள்.நன்கு சுருண்டு வரும்வரை கிளறி, ஒரு தட்டில் கொட்டி சமப்படுத்தி, ஆறியதும் துண்டுகள்போடுங்கள். இந்த கட்லெட்டை அப்படியேவும் சாப்பிடலாம். வெறும் தோசைக்கல்லில் லேசாகஎண்ணெய் ஊற்றி நன்கு புரட்டி எடுத்தும் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கீரை கட்லெட், 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, சேர்த்து, நன்கு, உப்பு, தேவையான, இஞ்சி, மல்லித்தழை, பூண்டு, Recipies, சமையல் செய்முறை