பொட்டுக்கடலை கஞ்சி
தேவையானவை: பொட்டுக்கடலை - 1 கப், பால் - ஒரு கப், சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை: பொட்டுக்கடலையை மிக்ஸியில் அல்லது மிஷினில் நன்கு அரைத்து, சலித்துக்கொள்ளவும். இந்த மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, நன்கு கொதிக்கும் நீரை கொஞ்சம் ஊற்றிக் கரைத்துக்கொள்ளவும். இத்துடன் பால், சர்க்கரை சேர்த்து அருந்தலாம். கைக்குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, பொட்டுக்கடலைக் கஞ்சியில் பால் சேர்க்காமல் கொஞ்சம் தண்ணீராகக் காய்ச்சிக் கொடுக்கலாம். பால் அலர்ஜி இருக்கும் குழந்தைகளுக்கும் இதே போல் கொடுக்கலாம். புரோட்டீன் சத்து நிறைந்தது இந்தக் கஞ்சி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொட்டுக்கடலை கஞ்சி, உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!, 30 Type Kanji, பால், Recipies, சமையல் செய்முறை