கேழ்வரகுக் கஞ்சி

தேவையானவை: கேழ்வரகு மாவு - அரை கப், உப்பு - தேவையான அளவு, மோர் - 2 கப்.
செய்முறை: கேழ்வரகு மாவை, தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கையால் கரைத்து, அடுப்பில் சிறு தீயில் வைத்து கிளறுங்கள். கட்டிபடாமல் கிளறிக்கொண்டே இருந்தால், மாவு வெந்துவிடும். சிறிது தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, தொட்டுப் பார்த்தால் ஒட்டாமல் இருக்கவேண்டும். அந்தப் பதத்தில் இறக்கிவிடவும். ஆறியதும், இந்தக் களியில் சிறிது எடுத்து, மோர், உப்பு சேர்த்துக் கரைத்துக் குடிக்கலாம். இந்தக் கஞ்சிக்கு, ஊறுகாய், சின்ன வெங்காயம் அல்லது காரமில்லாத பிஞ்சு பச்சை மிளகாய் சரியான ஜோடி. காலையில் இரண்டு டம்ளர் நிறைய கேழ்வரகு கஞ்சி குடித்தால், வேறு டானிக்கே வேண்டாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கேழ்வரகுக் கஞ்சி, உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!, 30 Type Kanji, கேழ்வரகு, Recipies, சமையல் செய்முறை