ராகி மால்ட்
தேவையானவை: கேழ்வரகு - 5 கப், சர்க்கரை - தேவையான அளவு, ஏலக்காய் (தோல் நீக்கிய பருப்பு மட்டும்) - சிறிது, கேசரி பவுடர் அல்லது குங்குமப்பூ - சிறிது.
செய்முறை: முதல்நாள் இரவே கேழ்வரகை கல் இல்லாமல் அரித்து, ஊறவைக்கவும். மறுநாள் காலையில், நீரை வடித்துவிட்டு, கேழ்வரகை மட்டும் ஒரு சுத்தமான துணியில் கட்டி முடிந்துவைக்கவும். மூன்றாம் நாள் இது நன்கு முளை விட்டு வந்திருக்கும். முளைகட்டிய இந்தக் கேழ்வரகை துணியில் விரித்துவிட்டு உலர்த்தவும். நன்கு காய்ந்ததும், அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து வறுக்கவும். (வாணலி சூடானதும் போட்டு, சில விநாடிகள் வறுத்தால் போதும். இல்லையெனில் தீய்ந்துவிடும்).
இதை மிஷினில் கொடுத்து நன்கு நைஸாக அரைத்துக்கொள்ளவும். பிறகு, மெல்லிய ஒரு துணியில் போட்டு சலித்துக்கொள்ளவும் (இதற்கு ‘வஸ்திரகாயம்’ என்று பெயர்). சலித்தெடுத்த மாவுடன் பொடித்த ஏலம், கேசரி பவுடர் அல்லது குங்குமப்பூ, பொடித்த சர்க்கரை ஆகியவற்றைக் கலந்துவைத்துக்கொள்ளவும். இதுதான் ‘இன்ஸ்டன்ட் ராகிமால்ட்’ பவுடர். சூடான பால் ஒரு கப் எடுத்து, அதில் இந்த ராகிமால்ட் பவுடரை ஒரு டீஸ்பூன் கலந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். குளிரவைத்தும் குடிக்கலாம். உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பானம் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ராகி மால்ட், உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!, 30 Type Kanji, நன்கு, துணியில், கேழ்வரகை, பவுடர், Recipies, சமையல் செய்முறை