தனியா ஊறல் கஞ்சி
தேவையானவை: தனியா, மிளகு, சுக்கு - தலா 10 கிராம்.
செய்முறை: மேலே சொன்ன மூன்றையும், 2 அல்லது 3 கப் தண்ணீர் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, அடுப்பை அணைத்துவிட்டு, பாத்திரத்தை மூடி வைத்துவிடவும். தனியா, சுக்கு, மிளகு ஆகியவற்றின் சாரம் இறங்க, இறங்கத்தான் அந்த நீருக்கு அதிக சுவை கிடைக்கும். மேலே தெளிந்து நிற்கும் தண்ணீரை வடித்து, பால், சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். ஒரு முறை வேகவைக்கும் சுக்கு, மிளகு, தனியாவிலேயே இரண்டு, மூன்று முறை தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாம். தெளிந்த சுக்கு நீரைக் கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் பாம்பே ரவையைப் போட்டு வேகவிட்டு, வெந்ததும் உப்பு, மோர் சேர்த்து சாப்பிடலாம்.
ஆசிரியப் பணியில் இருப்பவர்கள், பேச்சாளர்கள், பாடகர்கள் ஆகியவர்கள் இந்தக் கஞ்சியை அடிக்கடி பருகலாம். தொண்டைக்கு இதம் தரும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனியா ஊறல் கஞ்சி, உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!, 30 Type Kanji, சுக்கு, மிளகு, Recipies, சமையல் செய்முறை