சீஸனல் கஞ்சி
தேவையானவை: மாங்காய் இஞ்சி - 25 கிராம், பச்சை மிளகு - 10 கிராம், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, மோர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, எலுமிச்சம்பழம் - 1, மல்லித்தழை - சிறிது.
செய்முறை: மாங்காய் இஞ்சியைத் துருவிக்கொள்ளவும். பச்சை மிளகை உதிர்த்துக்கொள்ளவும். கேழ்வரகுக் கூழை (பக்கம் 112-ல் சொல்லப்பட்டுள்ள) முறைப்படி தயார் செய்துகொள்ளவும். அதில் ஒரு கப் எடுத்து, மோர், உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். அத்துடன் துருவிய இஞ்சி, மிளகு சேர்த்து, எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து சாப்பிடவும். மாங்காய் இஞ்சி, பச்சை மிளகு சீஸனில் அடிக்கடி இந்தக் கஞ்சியை செய்து சாப்பிடலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீஸனல் கஞ்சி, உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!, 30 Type Kanji, மிளகு, பச்சை, இஞ்சி, மாங்காய், Recipies, சமையல் செய்முறை