சேமியா மிக்சர்

தேவையானவை: சேமியா - 2 டீஸ்பூன், ரவை - 2 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, இஞ்சி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் சேமியா, ரவை சேர்க்கவும். சில நிமிடங்களில் இவை வெந்துவிடும். அதில் உப்பு சேர்த்து, பொடியாக நறுக்கிய மல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள், கேரட், வெள்ளரி போன்றவற்றை துருவியும், பிரெட்டை உதிர்த்துப் போட்டும் சாப்பிடலாம். நல்ல சத்தான காலை உணவும் கூட. சேமியாவையும் ரவையையும் அரைத்துவைத்துக்கொண்டால் இன்ஸ்டன்ட் சேமியா மிக்சர் பொடி த யார். தேவையானபோது, தன்ணீரில் கலக்கிக் காய்ச்சி, மோர், உப்பு சேர்த்துப் பருகலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேமியா மிக்சர், உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!, 30 Type Kanji, உப்பு, சேமியா, Recipies, சமையல் செய்முறை