தயிர் சேமியா
தேவையானவை: சேமியா - அரை கப், தயிர் - 2 டேபிள்ஸ்பூன், பால் - அரை கப், உப்பு -தேவைக்கேற்ப, எண்ணெய் - 4 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை,பச்சை மிளகாய் - 1, மல்லித்தழை - 1 டீஸ்பூன், துருவிய கேரட் - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு -5, உலர் திராட்சை - 10, துருவிய இஞ்சி - கால் டீஸ்பூன்.
செய்முறை: சேமியாவை தண்ணீர் சேர்த்து முக்கால் பதமாக வேகவைத்தெடுக்கவும். பின் நீரைவடித்துவிட்டு, குளிர்ந்த நீரில் 2 அல்லது 3 முறை அலசி நீரை நன்றாக வடித்து விடவும்.வாணலியில் எண்ணெயைக் காயவைத்து முந்திரி, உலர்திராட்சை இரண்டையும் சிவக்கவறுத்தெடுத்த பிறகு, அதில் கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் துருவிய இஞ்சி, கறிவேப்பிலை,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி சேமியாவில் சேர்க்கவும். தயிரைக் கடைந்து, பால், உப்புஆகியவற்றையும் சேமியாவில் கலந்து கிளறி பின் மல்லித்தழை, துருவிய காரட், முந்திரி,உலர்திராட்சை கொண்டு அலங்கரிக்கவும். இதை குளிரவைத்து வைத்து சாப்பிட்டால் இன்னும்சுவையாக இருக்கும். (சற்று கெட்டியாக இருந்தால் மேலும் சற்று புளிப்பில்லாத தயிரைக்கடைந்துவிட்டு அதில் சேர்த்து பரிமாறலாம்).
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தயிர் சேமியா, 30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, டீஸ்பூன், துருவிய, அதில், சேர்த்து, Recipies, சமையல் செய்முறை