தேன் நெல்லிக்காய்
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 5, படிகாரம் (நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்) -கால் டீஸ்பூன், சர்க்கரை - 1 கப், தண்ணீர் - 1 கப், சிட்ரிக் ஆசிட் - 1 சிட்டிகை, தேன் - 2டீஸ்பூன்.
செய்முறை: நெல்லிக்காயை கழுவி எல்லா பக்கங்களிலும் ஒரு கோணி ஊசியால் குத்திவிட்டு, 2அல்லது 3 நாட்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். தினமும் நீரை மாற்றவேண்டும். பிறகு படிகாரத்தை(நெல்லிக்காய் மூழ்கும் அளவிலான) தண்ணீரில் கரைத்து, நெல்லிக்காயை அதில் போட்டுகொதிக்கவிடவும். 5 நிமிடம் வரை கொதிக்க வைத்து பிறகு சாதாரண தண்ணீருக்கு மாற்றிகழுவிக்கொள்ளவும். (படிகாரம் கிடைக்காதவர்கள், துணியில் காயை மூட்டையாகக் கட்டி வெந்நீரில்5 நிமிடம் வேகவிட்டு எடுக்கலாம்).பிறகு சர்க்கரை, தண்ணீர், சிட்ரிக் ஆசிட் சேர்த்து அடுப்பில் வைத்து சர்க்கரை பாகு தயாரிக்கவும்.(சர்க்கரை + சிட்ரிக் ஆசிட் கரையும் வரை கொதித்தால் போதும்). இந்தப் பாகில் காயை போட்டுஊற விடவும். கடைசியில் தேன் சேர்க்கவும். காசியில் இந்த நெல்லிக்காய் மிகவும் ஸ்பெஷல்அயிட்டம். உடலுக்கு மிகவும் நல்லது. ஊற ஊற சுவை கூடும். பல நாட்கள் வைத்திருந்துஉபயோகப்படுத்தலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேன் நெல்லிக்காய், 30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, சர்க்கரை, பிறகு, ஆசிட், சிட்ரிக், நெல்லிக்காய், Recipies, சமையல் செய்முறை