நுங்கு ரோஸ்மில்க்
தேவையானவை: இளம் நுங்குச் சுளைகள் - 3, சர்க்கரை - 3 டீஸ்பூன், ரோஸ் சிரப் - 1 டீஸ்பூன்,பால் - முக்கால் கப், சாரைப் பருப்பு அல்லது பிஸ்தா பருப்பு - கால் டீஸ்பூன், நெய் - அரைடீஸ்பூன்.
செய்முறை: நுங்கின் தோலை நீக்கி மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். வாணலியில்நெய்யை சூடு செய்து, சாரைப்பருப்பை வறுத்தெடுக்கவும். பாலைக் காய்ச்சிக்கொள்ளவும். பிறகு,காய்ச்சி, ஆறிய பாலில் சர்க்கரை, ரோஸ் சிரப், அரைத்த நுங்கு, வறுத்த பருப்பு எல்லாவற்றையும்சேர்த்து கலக்கி பரிமாறவும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அருந்தினால் சுவை கூடுதலாகஇருக்கும். கோடைக்கு இதமாக நுங்கும் பாலும் சேர்ந்த அருமையான பானம் இது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நுங்கு ரோஸ்மில்க், 30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, பருப்பு, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை