தேங்காய்ப்பால் கொழுக்கட்டை
தேவையானவை: துருவிய தேங்காய் - 3 கப், பச்சரிசி - அரை கப், சர்க்கரை - அரை கப்,ஏலக்காய் - 2, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பச்சரிசியை ஊறவைத்து நன்றாக ஆட்டவும். பின் வாணலியில் எண்ணெயை சுடவைத்து, மாவை அதில் ஊற்றி நன்கு சூடு வந்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கி, ஆறியதும்சிறிய, நீள வடிவமுள்ள உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.தேங்காயை மிக்ஸியில் அரைத்து கெட்டியாகப் பால் எடுக்கவும். பால் 2 கப் அளவுஇருக்கவேண்டும். அதில் சர்க்கரை சேர்த்துக் கலந்து, அடுப்பில் வைக்கவும். வேகவைத்தகொழுக்கட்டைகளை, சர்க்கரை கலந்த தேங்காய்ப்பாலில், வைத்து ஒரு கொதி வந்ததும் கிளறி,சிறிது கெட்டியானதும் இறக்கவும். ஏலக்காய் பொடித்து தூவி பரிமாறவும். அருமையான மாலைநேர சிற்றுண்டி இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேங்காய்ப்பால் கொழுக்கட்டை, 30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, சர்க்கரை, Recipies, சமையல் செய்முறை