சிரிக்கலாம் வாங்க 89 - சிரிக்கலாம் வாங்க
டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
-***-
அமைச்சரே... இங்க விரித்திருந்த கம்பளம் எங்கே ?'
'சம்பளம் தர வக்கில்லை....கம்பளம் ஒரு கேடா’னு ஒரு சேவகன் சுருட்டிச் சென்று விட்டான் மன்னா !
-***-
மன்னா... உங்களுக்குச் சொந்தமான பகுதியைக் கைப்பற்ற, எதிரி மன்னர்கள் மோதிக்கொள்கிறார்கள்!
எனக்குச் சொந்தமான பகுதியா... எது அது?
உங்கள் முதுகுதான் மன்னா!
-***-
அவரை எம்.பி ஆக்கினது தப்பாப் போச்சா..?
சின்ன வீட்டு பிச்சினைக்கு மூணு நாளா, சமைக்க விடாமே வீட்டு கிச்சன்லே கூச்சல் போட்டுட்டிருக்காரு...!
-***-
இந்தப் படத்துல அடிக்கடி மதியச் சாப்பாட்டைப் பற்றியே கதாநாயகன் வசனம் பேசறாரே... ஏன்?.
அது லஞ்ச் டயலாக்காம்..!
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 87 | 88 | 89 | 90 | 91 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 89 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், மன்னா, சொந்தமான, வீட்டு, கம்பளம், kadi, நகைச்சுவை, சிரிப்புகள்