சிரிக்கலாம் வாங்க 87 - சிரிக்கலாம் வாங்க
இரண்டு சிறுவர்கள்........
''இரண்டு நாள் ஸ்கூல் டூர் போறே. ஜாலியா இல்லாம ஏன் சோகமா இருக்கே?''
''டூர் போயிட்டு வந்த பிறகு பயண அனுபவக் கட்டுரை இருபது பக்கம் எழுது'ன்னு டார்ச்சர் பண்ணுவாரே டீச்சர்!''
-***-
பஸ்ஸில் போகும் போது என் பையில் ஒருத்தன் பிளேடு போட்டுட்டான்.
அப்புறம் என்னாச்சி
பிளேடை தூக்கி வெளியில் போட்டு விட்டேன்.
-***-
மாமூல் ரொம்ப பப்ளிக்கா மாறிடுச்சி.
ஏன் சலிச்சிக்கிறீங்க?
பின்னே என்னங்க? போலீஸ் ஸ்டேஷன்ல பாருங்க. விழா எடுத்து திருடனுக்கு மாமூல் மாணிக்கம்னு இன்ஸ்பெட்டர் பட்டம் தர்றாரு.
-***-
சீக்கிரமா ஒரு பேப்பர் தோசை கொண்டு வாப்பா....
சீக்கிரம் நா நேத்திய இஷ்யு தான் கெடைக்கும் பரவாயில்லையா?
-***-
"வினாத்தாள்களை திருட முயன்ற குற்றத்திற்காக தலைவரின் மகனை கைது செஞ்சாங்களே அப்புறம் என்னாச்சு....?"
"கடினமான கல்விமுறைதான் காரணம்னு விடுதலை பண்ணியாச்சு.."
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 85 | 86 | 87 | 88 | 89 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 87 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், ", அப்புறம், மாமூல், டூர், இரண்டு, kadi, நகைச்சுவை, சிரிப்புகள்