சிரிக்கலாம் வாங்க 78 - சிரிக்கலாம் வாங்க
'எங்கம்மாவுக்கு மூச்சுவிட ரொம்ப சிரமமா இருக்காம் கமலா !'
'அவ்வளவு சிரமப்பட்டு எதுக்கு மூச்சு விடணும்னு கேக்கறேன் !'
-***-
ஒரு மனைவியை வெச்சுண்டு காலம் தள்ளறதே கஷ்டமா இருக்கு.. . ஆனா நீங்க மூணு மனைவிங்களை வெச்சுக்கிட்டு ஈசியா காலம் தள்றீங்களே எப்படி ?
ஒரு மனைவி இருந்தா நம்மோட சண்டை போடுவா. மூணு மனைவி இருந்தா அவங்களுக்குள்ளேயே அடிச்சுப்பாங்க.. . நாம ஈசியா காலம் தள்ளலாம்
-***-
இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
யாருங்க அந்த மகாலட்சுமி ?....
எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!
-***-
‘’ புற வழிச்சாலையின்னு அறிவிப்பு பலகை இருந்தத மாற்றி புறமுதுகுச்சாலையின்னு எழுதியிருக்கிறாங்களே! ஏன்?’’
’’ வழக்கமா மன்னர் இந்த வழியாத்தான் புறமுதுகிட்டு ஓடி வருவாராம்!’’
-***-
சே.. வர வர எதையெதைத்தான் இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு!
ஏன் அப்படிச் சொல்றீங்க ?
கொலஸ்ட்ரால் ப்ரீன்னு போட்டிருக்காங்களே!
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 76 | 77 | 78 | 79 | 80 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 78 - சிரிக்கலாம் வாங்க, வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, காலம், மனைவி, இருந்தா, மகாலட்சுமி, ஈசியா, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், மூணு