சிரிக்கலாம் வாங்க 46 - சிரிக்கலாம் வாங்க
"போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற அபயக் குரல் கேட்குதே..?"
"சத்தம் போடாம வாரும். அது மன்னர் குரல்தான். எதிரிகள் வாளைப் பிடுங்கிட்டுப் போய்ட்டாங்களாம்.."
-***-
வீரபாண்டியகட்டபொம்மன் ரீமேக் செய்யுறீங்களாமே சிம்பு. என்ன பெயர் வைக்கிறீங்க...?
"கிஸ்தி"
-***-
அம்மா…அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்
ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்..
அதுதான்..
-***-
டாக்டர் எனக்கு நீங்க மருந்து கொடுத்ததும் ஏன்?இரண்டு....இரண்டா தெரியுது....
விலைவாசி ஏறியது உங்களுக்கு தெரியலை போல....., போன வாரம் வரைக்கும் என் பீஸ் நூறு ரூபாய், இப்ப 200 ரூபாய்...!
-***-
டாக்டர்..எனக்கு டைஃபாய்டா...என் நண்பர் ஒருத்தர் டைஃபாய்ட் வந்துதான் செத்தார்..நானும் அப்படி செத்துடுவேனா?
கவலைப்படாதீங்க..அப்படி ஏதாவது ஆச்சுன்னா..உங்களுக்கு வந்தது மலேரியான்னு சொல்லிடறேன்.
-***-
ஏங்க, உங்க அம்மா இந்த திட்டு திட்டறாங்களே..கேட்க மாட்டீங்களா?
கேட்டுக்க்கிட்டுத்தானே இருக்கேன்
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 46 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், ", jokes, எனக்கு, உங்களுக்கு, அப்படி, டாக்டர், ரூபாய், ஆஃபீஸ், நகைச்சுவை, kadi, வாள், சிரிப்புகள்