மௌரியப் பேரரசு
அசோகர் புத்த சமயத்தை தழுவி, அதனைப் பரப்புவதற்கு முயற்சிகளை எடுத்தபோதிலும் அவரது தர்மக் கொள்கை மேலும் உயரிய கருத்தாகும். அது -ஒ வாழ்க்கை நெறி; ஒழுக்க விதி; அனைத்து மக்களும் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய கோட்பாடுகள் என்று கூறலாம். அசோகரது தர்மக் கோட்பாடுகள் அவரது கல்வெட்டுக்களில் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பொதுவான சிறப்புக்கூறுகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
1 தாய், தந்தைக்குப் பணிவிடை செய்தல், அஹிம்சையைக் கடைப்பிடித்தல், உண்மையை நேசித்தல், ஆசிரியர்களைப் போற்றுதல் மற்றும் உறவினரை நன்றாக நடத்துதல்.
2 திருவிழாக் கூட்டங்களையும் விலங்குகளை பலியிடுதலையும் தடை செய்தல்; பொருட் செலவுமிக்க மற்றும் பொருளற்ற சடங்குகளையும் வழக்கங்களையும் தவிர்த்தல்.
3 சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு ஆட்சிமுறையை செம்மையாக திறம்பட சீரமைத்தல்; மக்களுடன் நேரடித் தொடர்பை எப்போதும் வைத்திருக்கும் பொருட்டு தர்ம யாத்திரைகளை மேற்கொள்ளுதல்.
4. பணியாளர்களை எஜமானர்களும், கைதிகளை அரசாங்க அதிகாரிகளும் மனித நேயத்துடன் நடத்துதல்.
5 விலங்குகள்மீது கருணைகாட்டி அஹிம்சையைக் கடைப்பிடித்தல்; உறவினரை மதித்தல்; பிராமணர்களுக்கு கொடையளித்தல்.
6. அனைத்து சமயப் பிரிவுகளுக்கிடையே சகிப்புத் தன்மையை வலியுறுத்தல்.
7. போர் செய்வதை தவிர்த்து தர்மத்தின்வழி வெற்றி கொள்ளுதல்.
அஹிம்சை கோட்பாடும், அசோகரது தர்ம கருத்துக்களும் புத்தரின் போதனைகளை ஒட்டியே அமைந்துள்ளன. ஆனால் அசோகர் தனது தர்மக்கோட்பாடுகளை புத்தரின் போதனைகளுடன் தொடர்புப்படுத்த வில்லை. புத்த சமயம் அவரது தனிப்பட்ட நம்பிக்கையாகும். அவர் கூறிய தர்மம் ஒரு பொதுவான ஒழுக்கநெறியாகும். சமூகத்தின் அனைத்து தரப்பிற்கும் தனது தர்மக்கோட்பாடுகள் சென்றடைய வேண்டும் என அசோகர் விரும்பினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மௌரியப் பேரரசு , வரலாறு, இந்திய, அவரது, மௌரியப், அசோகர், அனைத்து, பேரரசு, அசோகரது, நடத்துதல், கடைப்பிடித்தல், உறவினரை, தர்ம, தனது, புத்தரின், அஹிம்சையைக், பொதுவான, இந்தியா, புத்த, தர்மக், கோட்பாடுகள், தர்மம், கூறலாம், செய்தல்