மௌரியப் பேரரசு
சில அறிஞர்களின் கருத்துப்படி அசோகர் உடனடியாக புத்த சமயத்துக்கு மாறிவிடவில்லை என்றும் படிப்படியாகவே புத்த சமயத்தை தழுவினார் என்றும் கருதுகின்றனர். போருக்குப்பின் அவர் ஒரு சாக்கிய உபாசகரானார் (சாதாரண சீடர்). இரண்டரை ஆண்டுகள் கழித்து ஒரு புத்த பிக்கு (துறவி)வாக மாறினார். பின்னர் வேட்டையாடுதலை கைவிட்டார். புத்தகயாவிற்கு புனிதப்பயணம் மேற்கொண்டார். புத்த சமயத்தைப் பரப்புவதற்காக தூதுக்குழுக்களை அனுப்பினார். தர்மத்தை விரைவாக பரப்பும் பொருட்டு தர்ம மகாமாத்திரர்கள் என்ற சிறப்பு அலுவலர்களை நியமித்தார். கி.மு. 241 ஆம் ஆண்டு புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்துவுக்கு அருகிலுள்ள லும்பினி வனத்திற்கு பயணம் மேற்கொண்டார். மேலும், புத்தசமய புனித இடங்களான சாரநாத், ஸ்ராவஸ்தி, குசிநகரம் போன்ற இடங்களுக்கும் சென்றார். தனது மகன் மகேந்திரன், மகள் சங்கமித்திரை ஆகியோரின் தலைமையில் சமயப் பரப்புக்குழுவை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் அங்கு போதிமரத்தின் கிளையை நட்டனர். புத்த சங்கத்தை வலிமைப்படுத்துவதற்காக அசோகர் கி.மு. 240 ஆம் ஆண்டு பாடலிபுத்திரத்தில் மூன்றாவது புத்தசமய மாநாட்டைக் கூட்டினார். மொக்கலிபுத்த திசா அம்மாநாட்டுக்கு தலைமை வகித்தார்.
அசோகரது பேரரசுப் பரப்பு
சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள், கேரள புத்திரர்கள் ஆகியோர் எல்லைப்புறத்திலிருந்த தென்னிந்திய அரசுகள் என அசோகரது கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. எனவே, இவை மௌரியப் பேரரசுக்கு வெளியே அமைந்திருந்தன என்பது தெளிவாகிறது. காஷ்மீர் மௌரியப் பேரரசுக்கு உட்பட்டது என ராஜதரங்கிணி குறிப்பிடுகிறது. நேபாளமும் மௌரியப் பேரரசின் ஒரு பகுதியாகும். வடமேற்கு எல்லையை ஏற்கனவே சந்திரகுப்த மௌரியர் நிர்ணயம் செய்திருந்தார்.

‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மௌரியப் பேரரசு , மௌரியப், புத்த, வரலாறு, இந்திய, பேரரசு, புத்தசமய, அசோகரது, பேரரசுக்கு, ஆண்டு, அசோகர், இந்தியா, என்றும், மேற்கொண்டார்