மௌரியப் பேரரசு
மௌரியர் ஆட்சிக் காலத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தவறாமல் பின்பற்றப்பட்டது. மக்களின் எண்ணிக்கை அவர்களது ஜாதி, தொழில் போன்ற விவரங்களை கிராம அதிகாரிகள் சேகரித்தனர். ஒவ்வொரு வீட்டிலும் இருந்த பிராணிகளும் கணக்கில் கொண்டு வரப்பட்டன. நகரங்களில் உள்நாட்டு, அயல்நாட்டு மக்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக நகராட்சி அதிகாரிகள் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தினர். மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் ஒற்றர்சுள் தரும் விவரங்களோடு சரிபார்க்கப்பட்டன. மௌரியர் ஆட்சி முறையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒரு நிரந்தர நிறுவனமாக இருந்ததாகத் தெரிகிறது.
மாகாண, உள்ளாட்சி நிர்வாகம்
தட்சசீலம், உஜ்ஜயினி, சுவர்ணகிரி, கலிங்கம் என்ற தலைநகரங்களைக் கொண்ட நான்கு மாகாணங்களாக மௌரியப் பேரரசு பிரிக்கப்பட்டிருந்தது. மாகாண ஆளுநர்கள் பெரும்பாலும் அரச குடும்பத்திலிருந்தே தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். சட்டம் ஒழுங்கை பராமரித்தல், வருவாய் வசூலிப்பது போன்றவை அவர்களது முக்கிய கடமைகளாகும். ராஜிகர்கள் என்று அழைக்கப்பட்ட அதிகாரிகளின் கீழ் மாவட்ட நிர்வாகம் இருந்தது. அவர்களது நிலை மற்றும் அதிகாரம் தற்கால மாவட்ட ஆட்சித் தலைவர்களையே ஒத்திருந்தது எனலாம். அவர்களுக்கு உதவியாக யுக்தர்கள் என்ற துணை அதிகாரிகள் இருந்தனர். கிராமணி என்ற அதிகாரியின்கீழ் கிராம நிர்வாகம் இருந்தது. பத்து அல்லது பதினைந்து கிராமங்களுக்கு உயர் அதிகாரியாக கோபன் என்ற அதிகாரி செயல்பட்டார்.
நகர நிர்வாசும் குறித்து கௌடில்யரும், மெகஸ்தனிசும் விவரமாகக் குறிப்பிட்டுள்ளனர். நகரிகா என்ற நகர மேற்பார்வையாளரின் பணி பற்றி அர்த்தத் சாஸ்திரத்தில் ஒரு முழு அத்தியாயமே உள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிப்பதே அவரது தலையாய பணியாகும். தலா ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆறு குழக்கள் பாடலிபுத்திர நகர நிர்வாகத்தை நடத்தியதாக மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார். இக் குழுக்களின் பணிகள் வருமாறு:
1. தொழிற்சாலைசுள்
2. அயல்நாட்டவர்கள்
3. பிறப்பு, இறப்பு பதிவு
4. வாணிகம்
5. பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை
6. விற்பனை வரி வசூல்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மௌரியப் பேரரசு , வரலாறு, மக்கள், மௌரியப், கணக்கெடுப்பு, பேரரசு, இந்திய, அவர்களது, அதிகாரிகள், நிர்வாகம், கொண்ட, மாவட்ட, விற்பனை, ஒழுங்கை, சட்டம், மக்களின், தொகை, இந்தியா, மௌரியர், தொகைக், கிராம, மாகாண