மௌரியப் பேரரசு
அசோகர் "அரசர்களிலேயே தலைசிறந்தவராக" விளங்கினார். மகா அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர் போன்ற உலகின் தலைசிறந்த பேரரசர்களையும் அசோகர் விஞ்சி நின்றார். எச்.ஜி. வெல்ஸ் என்பவரது கூற்றுப்படி "வரலாற்றின் பட்டியலில் குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான அரசர்களில் அசோகரின் பெயர் மட்டும் தன்னந்தனி நட்சத்திரமாக ஓளிவீசுகிறது" அசோகர் தமது கோட்பாடுகளுக்கு உண்மையானவராகத் திகழ்ந்து அவற்றைக் கடைப்பிடித்து ஒழுகினார். அவர் கனவு காண்பவரல்ல; மாறாக ஒரு நடைமுறை மேதை. அவரது தர்மக் கொள்கை உலகம் அனைத்திற்கும் பொதுவானது. மனித குலமனைத்திற்கும் இன்றைக்கும் பொருந்தவல்லது. கருணைமிக்க ஆட்சிக்கும், போரில் வெற்றி பெற்ற பிறகும் போரைத் துறந்து அமைதிக்கொள்கையைக் கடைப்பிடித்தமைக்கும் அசோகர் வரலாற்றில் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார் என்று கூறலாம். அவரது கோட்பாட்டின் மையக்கருத்து மனித குலத்தின் நலனையே வலியுறுத்துவதாக அமைந்திருந்தது.
பிற்கால மௌரியர்கள்
கி.மு. 232ம் ஆண்டு அசோகர் மறைந்தபின் மௌரியப் பேரரசு இரண்டுபகுதிகளாகப் பிரிக்கப் பட்டது மேற்குப் பகுதியில் அசோகரின் புதல்வர் குணாளன் ஆட்சிபுரிந்தார். கிழக்குப் பகுதியில் அசோகரது பேரன்களில் ஒருவரான தசரதன் அரசராக இருந்தார். பாக்டிரிய படையெடுப்புகளின் விளைவாக பேரரசின் மேற்குப் பகுதி சீர்குலைந்தது. தசரதனின் புதல்வர் சாம்பிரதி என்பவரது ஆட்சியில் கிழக்குப் பகுதி மட்டும் கட்டுக்கோப்பாக இருந்தது. மௌரிய வம்சத்தின் கடைசி அரசரான பிருகத்ரதன் என்பவரை அவரது படைத்தளபதி புஷ்யமித்திர சுங்கன் படுகொலை செய்தார்.
மௌரியர் ஆட்சி முறை
மத்திய அரசாங்கம்
மௌரியர் ஆட்சி தொடங்கி இந்தியாவில் முடியாட்சி முறை பெரும் வெற்றிபெற்றது. மௌரியருக்கு முந்தைய கால இந்தியாவிலிருந்த குடியரசு மற்றும் சிறுகுழு ஆட்சிமுறைகள் சீர்குலைந்தன. பண்டைய இந்தியாவின் முதன்மை அரசியல் கோட்பாட்டாளராக விளங்கிய கௌடில்யர் முடியாட்சி முறையை ஆதரித்தபோதிலும் வரம்பற்ற முடியாட்சியை அவர் விரும்பவில்லை. அரசன் தனது நிர்வாகத்தை செம்மையாக நடத்துவதற்கு அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். எனவே அரசனது ஆட்சிக்கு உதவியாக மந்திரி பரிஷத் என்ற அமைச்சரவை செயல்பட்டது. அதில் புரோகிதர், மகாமந்திரி, சேனாபதி, யுவராஜன் ஆகியோர் இருந்தனர். அன்றாட அலுவல்களை நிறைவேற்ற அமாத்தியர்கள் என்றழைக்கப்பட்ட சிவில் பணியாளர்கள் இருந்தனர். இவர்களை தற்கால இந்தியாவில் பணியாற்றும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளோடு ஒப்பிடலாம். அமாத்தியர்களை தேர்வு செய்யும் முறை குறித்து கௌடில்யர் விவரமாகக் கூறியுள்ளார். தர்மக் கோட்பாடுகளைப் பரப்புவதற்காக அசோகர் தர்மமகாமாத்திரர்களை நியமித்தார். மௌரியர் ஆட்சியில் நன்கு சீரமைக்கப்பட்ட ஆட்சித்துறை செயல்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மௌரியப் பேரரசு , அசோகர், வரலாறு, இந்திய, பேரரசு, மௌரியப், மௌரியர், அவர், முறை, அவரது, ஆட்சியில், பகுதி, ஆட்சி, முடியாட்சி, இருந்தனர், செயல்பட்டது, கௌடில்யர், கிழக்குப், இந்தியாவில், மனித, என்பவரது, இந்தியா, பண்டைய, இந்தியாவின், அசோகரின், மட்டும், பகுதியில், மேற்குப், தர்மக், புதல்வர்