மௌரியப் பேரரசு
அசோகரது ஆணைகள்
1837 ஆம் ஆண்டு ஜேம்ஸ் பிரின்செப் என்பவரால் முதன்முதலில் அசோகரது கல்வெட்டுகள் படித்தறியப்பட்டன. பாலிமொழியிலும், ஒருசில இடங்களில் பிராகிருத மொழியிலும் அவை எழதப்பட்டுள்ளன. பிரம்மி வரி வடிவத்தில் அவை அமைந்துள்ளன. வடமேற்கு இந்தியாவிலுள்ள அசோகரது கல்வெட்டுக்கள் கரோஷ்தி வரிவடிவத்தில் பொறிக்கப் பட்டுள்ளன. மொத்தம் பதினான்கு பெரிய பாறைக் கல்வெட்டுக்கள் உள்ளன. அவரால் புதியதாக கைப்பற்றப்பட்ட பகுதியில் இரண்டு கலிங்கக் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. முக்கிய நகரங்களில் பெரிய தூண் கல்வெட்டுக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை தவிர, சிறிய பாறை மற்றும் தூண் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. அசோகரது ஆணைகளான இவையனைத்தும் அசோகரின் தர்மம் பற்றியும், தனது அதிகாரிகளுக்கு அசோகர் பிறப்பித்த ஆணைகள் பற்றியும் கூறுகின்றன. பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டு அசோகரது கலிங்கப் போரைப்பற்றி குறிப்பிடுகிறது. தனது பேரரசில் தர்மத்தை பரப்புவதற்காக அசோகர் மேற்கொண்ட முயற்சிகளை ஏழாவது தூண் கல்வெட்டு விவரிக்கிறது. எனவே அசோகரது கல்வெட்டுக்கள் அசோகரைப் பற்றியும் மௌரியப் பேரரசு குறித்தும் அறிந்து கொள்ள முக்கிய சான்றுகளாகப் பயன்படுகின்றன.
மௌரியர்களின் அரசியல் வரலாறு
சந்திரகுப்த மௌரியர் (கி.மு. 322 - கி.மு. 298)
சந்திரகுப்த மௌரியர் |
கி.மு. 305 ஆம் ஆண்டு வடமேற்கு இந்தியாவை ஆட்சிபுரிந்த அலெக்சாண்டரின் படைத் தளபதியான செலூகஸ் நிகேடருக்கு எதிராக படையெடுத்தார். அவரை முறியடித்த சந்திரகுப்த மௌரியர், அவரோடு உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டார். அதன்படி, செலூகஸ் நிகேடர் சிந்துநதிக்கு அப்பாலிருந்த பகுதிகளான அரியா, அரகோஷியா, கெட்ரோஷியா போன்றவற்றை மௌரியப் பேரரசுடன் இணைத்துக்கொள்ள சம்மதித்தார். தனது மகளையும் மௌரிய இளவரசனுக்கு மணமுடித்துக் கொடுத்தார். சந்திரகுப்த மௌரியரும் செலூகஸ் நிகேடருக்கு பரிசாக 500 யானைகளை அளித்தார். கிரேக்க நாட்டின் தூதராக மெகஸ்தனிஸ் மௌரிய அரசவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சந்திரகுப்த மௌரியர் தனது ஆட்சிக் காலத்தின் முடிவில் சமண சமயத்தை தழுவினார். தனது மகன் பிந்துசாரனுக்காக அரியணையைத் துறந்த அவர், பத்ரபாகு தலைமையிலான சமணத்துறவிகள் புடைசூழ மைசூருக்கு அருகிலுள்ள சிரவணபெல்கோலாவை வந்தடைந்தார். அங்கு உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மௌரியப் பேரரசு , வரலாறு, சந்திரகுப்த, தனது, மௌரியர், மௌரியப், அசோகரது, கல்வெட்டுக்கள், பேரரசு, இந்திய, பற்றியும், செலூகஸ், தூண், என்றும், கைப்பற்றினார், கொண்டார், இந்தியா, மௌரிய, நிகேடருக்கு, அவர், ஆணைகள், பெரிய, பாறைக், வடமேற்கு, அசோகர், ஆண்டு, கல்வெட்டு, முக்கிய