விடுதலைக்குப்பின் இந்தியா
சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்
விடுதலையின்போது இந்தியாவில் 11 பிரிட்டிஷ் மாகாணங்களும் ஏறத்தாழ 566 சுதேச அரசுகளும் இருந்தன. பிரிட்டிஷார் இந்தியாவைவிட்டு அகன்றபிறகு இந்திய அரசுகள் சுதந்திரமாக இருக்கலாம் என்று நினைத்தன. தனது ஆற்றல் மற்றும் அரசியல் வெல் திறன் காரணமாக சர்தார் வல்லபாய் பட்டேல் 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்பே இந்திய சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்தில் இணையும்படி செய்தார். ஜுனாகத், ஜம்மு காஷ்மீர், ஹைதராபாத் ஆகிய மூன்று சுதேச அரசுகள் மட்டும் அவ்வாறு சேர மறுத்தன. ஜுனாகத் அரசின் ஆட்சியாளர் தமது மக்களின் விருப்பத்துக்கு மாறாக பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார். எனவே, பட்டேல் இந்திய துருப்புக்களை அங்கு அனுப்பி மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினார். அதன்படி ஜுனாகத் இந்தியாவில் இணைந்தது.
வல்லபாய் பட்டேல் |
ஜம்மு - காஷ்மீர் அரசு இந்திய - பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் அமைந்திருந்தது. அதன் அரசர் ராஜா ஹரிசிங், தொடக்கத்தில் அவர் சுதந்திர அரசராக தம்மைக் கருதிக்கொண்டார். பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிகளால் வழிநடத்தப்பட்ட பட்டாணியர்கள் காஷ்மீர்மீது படையெடுத்தபோது, ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார். காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டால் மட்டுமே, இந்தியா பன்னாட்டுச் சட்டப்படி தனது துருப்புக்களை உதவிக்கு அனுப்ப முடியும் என்று பிரதமர் நேரு எடுத்துக் கூறினார். ஆகவே 1947 அக்டோபர் 26 ஆம் நாள் ராஜா ஹரிசிங் இணைப்புறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டார். இதன்படி காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாயிற்று.
ஹைதராபாத் ஆட்சியாளர் நிசாம் இந்திய ஒன்றியத்துடன் இணைய மறுத்தார். பலமுறை எடுத்துக் கூறியும் நிசாம் பணிய மறுத்தமையால் 1948ல் இந்திய துருப்புக்கள் னஹதராபாத்துக்குச் சென்றது. நிசாம் சரணடைந்தார். இறுதியாக,ஹைதராபாத் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விடுதலைக்குப்பின் இந்தியா , இந்திய, இந்தியா, வரலாறு, சுதேச, காஷ்மீர், ஜுனாகத், நிசாம், விடுதலைக்குப்பின், ஹரிசிங், ஹைதராபாத், பட்டேல், இந்தியாவின், இணைந்தது, துருப்புக்களை, ராஜா, எடுத்துக், ஒன்றியத்துடன், இணைய, நீதித்துறை, ஆட்சியாளர், அரசுகள், வல்லபாய், இந்தியாவில், ஜம்மு, உயர், அரசுகளை, தனது