விடுதலைக்குப்பின் இந்தியா
1935 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு இந்தியத் தலைவர்கள் ஆற்ற வேண்டியிருந்த அவசரப் பணிகள் இரண்டு. முதலாவதாக, இந்தியாவுக்கென ஒரு அரசியலமைப்பை உருவாக்குவது; மற்றொன்று இந்திய ஒன்றியத்தில் சுதேச அரசுகளை ஒருங்கிணைப்பது. மேலும், இந்தியாவை பொருளாதார மற்றும் அறிவியல் ரீதியாக நவீனப்படுத்த வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இருந்தது. நீண்டகாலத் திட்டங்களாக நாட்டில் நிலவிய வறுமையை ஒழித்து, மக்களிடையே கல்வியைப் பரப்ப வேண்டிய பொறுப்பையும் அவர்கள் மேற்கொண்டனர்.
இந்திய அரசியலமைப்பு
ராஜேந்திரபிரசாத் |
வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை, பாராளுமன்ற முறை, அடிப்படை உரிமைகள், அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் போன்ற அம்சங்களை இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளாகக் கொள்ளலாம். மத்தியில் ஒருமுகத்தன்மையும் கூட்டாட்சித் தன்மையும் கலந்த ஒரு நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அதிகாரங்கள் மிகத் தெளிவாக மத்திய, மாநில, பொது ஆகிய மூன்று பட்டியல்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஐனாதிபதி நாட்டின் அரசியலமைப்புத் தலைவராகவும், பிரதம அமைச்சர் நிர்வாகத் தலைவராகவும் செயல்படுகின்றனர். மக்களவையின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சியின் தலைவர் பிரதமர் பதவி வகிக்கிறார். இந்திய நாடாளுமன்றம் இரண்டு அவைகளைக் கொண்டுள்ளது. ராஜ்ய சபை அல்லது மேலவை, லோக் சபை அல்லது கீழவை. ஒவ்வொரு மாநில அரசும் முதலமைச்சரின்கீழ் இயங்குகிறது. மாநில சட்டப்பேரவையின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சித் தலைவர் முதலமைச்சராகிறார். எனவே, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசாங்கங்கள் நாட்டை ஆட்சி புரிகின்றன. முறையான காலங்களில் தேர்தல்கள் நடைபெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
விடுதலைக்குப்பின் இந்தியா , இந்திய, இந்தியா, வரலாறு, விடுதலைக்குப்பின், மாநில, அரசியலமைப்பு, நாள், தலைவராகவும், பெரும்பான்மை, பெற்ற, அல்லது, தலைவர், ஆதரவு, ராஜேந்திரபிரசாத், அரசியலமைப்பை, இரண்டு, ரீதியாக, வேண்டிய, தலைவராக, டாக்டர்