விடுதலைக்குப்பின் இந்தியா
இந்தியாவின் உதவியோடு பங்காளதேஷ் என்ற நாடு உதயமானது. மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாகும். மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தானுக்குமிடையே விடுதலை குறித்த சச்சரவு தோன்றியபோது இந்தியா கிழக்கு பாகிஸ்தானின் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்தது. பங்களாதேஷ் விடுதலை அமைப்பான முத்திவாகினியுடன் இந்தியப் படைகள் இணைந்து போராடியதால் 1971 டிசம்பரில் பங்களாதேஷ் விடுதலை பெற்றது. 1971ல் பங்களாதேஷ் விடுதலை பெற்றதிலிருந்தே இந்தியா அதனுடன் நட்புறவைப் பேணி வருகிறது.
தனது அண்டை நாடுகளுடனும் இந்தியா நட்புடனேயே இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே சார்க் எனப்படும் தெற்காசிய பகுதி ஒத்துழைப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூடான், மாலத்தீவுகள் ஆகியன இதில் உறுப்பு நாடுகள். உறுப்பு நாடுகளுச்கிடையே பரஸ்பர பொருளாதார, சமூக, பண்பாட்டு ஒத்துழைப்பை பெருக்குவதே சார்க் அமைப்பின் நோக்கமாகும். இந்த குறிக்கோளை எட்டுவதற்கு அவ்வப்போது மாநாடுகளும் கூட்டப்படுகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
விடுதலைக்குப்பின் இந்தியா , இந்தியா, வரலாறு, பங்களாதேஷ், விடுதலை, இந்திய, விடுதலைக்குப்பின், இந்தியாவின், உறுப்பு, வருகிறது, சார்க், மக்கள், முக்கிய, இந்தியாவும், நட்புறவைப், கிழக்கு