விடுதலைக்குப்பின் இந்தியா
1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா சுதந்திரமான அயலுறவுக் கொள்கையை பின்பற்றி வருகிறது. இதனை வடிவமைத்தவர் இந்தியாவின் முதலாவது பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு ஆவார். இந்திய அயலுறவுக் கொள்கையின் அடிப்படைக் கொள்கைகள் அவரால் உருவாக்கப்பட்டவையே. கெடுபிடிப் போர் காலத்தில் அணிசேரா இயக்கத்தை வடிவமைத்தவர் அவரேயாவார். குடியேற்ற நாடுகளின் விடுதலைக்காகவும் அவர் ஆதரவுக்கரம் நீட்டினார். நாடுகளுக்கிடையேயான உறவுகள் குறித்த பஞ்சசீலம் அல்லது சமாதான சகவாழ்வுக்கான ஐந்து கொள்கைகளை அவர் வெளியிட்டார். அவையாவன:
- ஒருவருக்கொருவர் பிறரது பிரதேச ஒருமைப்பாட்டையும் இறைமையையும் மதித்து நடப்பது.
- ஆக்ரமிப்பை விலக்குதல்
- பிறரது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்
- சமத்துவம் மற்றும் பரஸ்பர உதவி
- சமாதான சகவாழ்வு
காமன்வெல்த் ஐக்கிய நாடுகள் சபை போன்ற பன்னாட்டு அமைப்புகளிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. முன்னாள் பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளைக் கொண்ட அமைப்பான காமன்வெல்த்தில் இந்தியா உறுப்பினராக தொடரவேண்டும் என்று நேரு முடிவெடுத்தார். உலகின் பல்வேறு பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு படையிலும் இந்தியா தனது பங்கை ஆற்றியுள்ளது. கொரியா, இந்தோசீனா, சூயஸ் கால்வாய், காங்கோ போன்ற இடங்களில் செயல்பட்ட ஐ.நா. பாதுகாப்பு படைக்கு இந்தியா தனது துருப்புக்களை அனுப்பிவைத்தது.
காஷ்மீர் சிக்கல் காரணமாக இந்தியா பாகிஸ்தானுடன் மூன்று முக்கிய போர்களில் ஈடுபட்டது (1965, 1971, 2000).
கெடுபிடிப்போர் காலத்தில் உலகின் வல்லரசுகளாக விளங்கிய அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இந்தியா நட்புறவையே கடைப்பிடித்தது. பங்களாதேஷ் குறித்த சிக்கல் தோன்றியபோது இந்திய சோவியத் யூனியனுடன் 1971 ஆம் ஆண்டு இந்தோ - சோவியத் நட்புறவு உடன்படிக்கையை செய்து கொண்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விடுதலைக்குப்பின் இந்தியா , இந்தியா, வரலாறு, இந்திய, அயலுறவுக், இந்தியாவின், விடுதலைக்குப்பின், பாதுகாப்பு, முக்கிய, உலகின், சோவியத், பிறரது, சிக்கல், தனது, குடியேற்ற, நேரு, வடிவமைத்தவர், காலத்தில், அவர், குறித்த, சமாதான