விடுதலைக்குப்பின் இந்தியா
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக எஸ்.கே. தார் தலைமையிலான முதலாவது மொழிவாரி மாகாண ஆணையம் 1948ல் அரசியலமைப்புக்குழுவால் ஏற்படுத்தப்பட்டது. இக்குழு அத்தகைய சாத்தியக்கூறுகள் இல்லை எனக் கூறியது. அதேயாண்டில், ஐவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், பட்டாபி சீதாராமையா ஆகியோர் அடங்கிய ஜேவிபி குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்தது. இந்தக் குழுவும் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவதை ஆதரிக்கவில்லை. ஆனால் நாட்டின் பல பகுதிகளில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கக் கோரி மக்கள் இயக்கங்கள் நடைபெற்றன. குறிப்பாக ஆந்திராவில் இத்தகைய இயக்கம் தீவிரமடைந்தது. ஆகவே, 1953 ஆம் ஆண்டு ஆந்திரா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதே சமயம் சென்னை மாநிலமும் (தமிழ்நாடு) தமிழ்பேசும் மாநிலமாக ஏற்கப்பட்டது. இத்தருணத்தில், திருத்தணியை சென்னை மாநிலத்துடன் தக்க வைப்பதற்காக ம.பொ. சிவஞானம் தலைமையேற்று நடத்திய இயக்கம் தமிழக வரலாற்றில் நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
ஆந்திர இயக்கம் பெற்ற வெற்றி பிறமொழி பேசும் மக்களின் தனி மாநிலப் போராட்டங்களை மேலும் ஊக்குவித்தது. 1953ல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நீதிபதி பசல் அலி தலைமையிலான மாநிலங்கள் சீரமைப்புக் குழுவை நியமித்தார். இக்குழுவில் பண்டிட் ஹிருதயநாத் குன்ஸ்ரூ, சர்தார் கே.எம். பணிக்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். 1955 செப்டம்பர் 30ல் இக்குழு தனது அறிக்கையை அளித்தது. அதன் அடிப்படையில் 1956ல் நாடாளுமன்றம் மாநிலங்கள் சீரமைப்பு சட்டத்தை நிறைவேற்றியது.
ஜவஹர்லால் நேரு |
இந்திய அரசியல் (1947 - 2000)
இந்தியாவின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேரு நவீன இந்தியாவின் சிற்பி என்று கருதப்படுகிறார். நாட்டின் ஒற்றுமையைக் காத்து, மக்களாட்சி நிறுவனங்களைப் போற்றி வளர்த்து இந்தியாவின் சுதந்திரத்தை மேலும் நிலைப்படுத்தினார். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் வித்திட்டார். சுதந்திரமான அயலுறவுக் கொள்கையை பின்பற்றிய நேரு இந்தியாவை வலிமையான நாடாக உருவாக்கினார். 1964ல் அவர் மறைந்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விடுதலைக்குப்பின் இந்தியா , வரலாறு, மாநிலங்கள், நேரு, மொழிவாரி, இந்தியா, இந்திய, இந்தியாவின், விடுதலைக்குப்பின், இயக்கம், ஜவஹர்லால், சென்னை, மேலும், அவர், உருவாக்கப்பட்டது, வளர்ச்சிக்கும், திருவாங்கூர், ஆகியோர், முதலாவது, தலைமையிலான, இக்குழு, குழுவை, நாட்டின், மாநிலமாக