வாரன் ஹோஸ்டிங்ஸ்
வாரன் ஹேஸ்டிங்சின் விரிவாக்கக் கொள்கை
வாரன் ஹேஸ்டிங்ஸ் தமது விரிவாக்கக் கொள்கைக்கு புகழ் பெற்றவராவார். இவரது ஆட்சிக் காலத்தில் ரோகில்லாப் போர், முதல் ஆங்கிலேய - மராட்டியப் போர், இரண்டாம் ஆங்கிலேய - மைசூர்ப்போர் ஆகிய போர்கள் நடைபெற்றன.
ஹமிஸ் ரகமத் கான் |
மராட்டியப் பகுதிகளுக்கும் அயோத்திக்கும் இடையே இருந்த ஒரு சிறு அரசு ரோகில்கண்ட். இதன் ஆட்சியாளர் ஹமிஸ் ரகமத் கான். மராட்டியப் படைபெடுப்பின் அச்சம் காரணமாக, ரகமத்கான் 1772ல் அயோத்தி நவாப்புடன் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டார். ஆனால், அத்தகைய படையெடுப்பு ஏதும் நடைபெறவில்லை. ஆனால் நவாப் அதற்கான கட்டணத்தை தருமாறு வற்புறுத்தினார். ரகமத் கான் காலதாமதம் செய்யவே பிரிட்டிஷார் உதவியுடன் நவாப் ரோகில்கண்ட் மீது படையெடுத்தார், ரோகில்கண்டுக்கு எதிராக பிரிட்டிஷ் துருப்புகளை அனுப்பிய வாரன் ஹேஸ்டிங்ஸ் அத்தகைய செயலுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாரன் ஹோஸ்டிங்ஸ் , வாரன், வரலாறு, இந்திய, ரகமத், மராட்டியப், கான், ஆங்கிலேய, ஹோஸ்டிங்ஸ், போர், ஹமிஸ், அத்தகைய, ரோகில்கண்ட், நவாப், செய்து, தலைமை, இந்தியா, சிறு, அதிகாரம், இச்சட்டத்தின், ஹேஸ்டிங்ஸ், விரிவாக்கக், ரோகில்லாப்