வாரன் ஹோஸ்டிங்ஸ்
1772 ஆம் ஆண்டு வங்காளத்தின் ஆட்சிப் பொறுப்பை வாரன் ஹேஸ்டிங்ஸ் ஏற்றபோது அங்கு குழப்பமே நிலவியது. வணிகக் குழுவின் நிதி நிலைமை மோசமாக இருந்தது. அப்போது நிலவிய பஞ்சம் மேலும் பற்றாக்குறைக்கே வித்திட்டது. ஆகவே பெருவாரியான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் கட்டாயத்தை வாரன் ஹேஸ்டிங்ஸ் உணர்ந்தார்.
இரட்டையாட்சியை ஒழித்தல்
கிழக்கிந்திய வணிகக் குழு தாமே 'திவானி' பொறுப்பையும் ஏற்று தமது முகவர்கள் மூலமாக நேரடியாக நிலவரி வசூலிக்க தீர்மானித்தது. எனவே ராபர்ட் கிளைவ் அறிமுகப்படுத்திய இரட்டையாட்சி முறை ஒழிக்கப்பட்டது. வணிகக்குழுவின் நிதிநிலைமையை சீரமைப்பதற்காக வாரன் ஹேஸ்டிங்ஸ் நவாபிற்கு அளிக்கப்பட்டுவந்த நிதியுதவி 32 லட்ச ரூபாயை பாதியாகக் குறைத்தார். முகலாயப் பேரரசருக்கு வழங்கப்பட்டுவந்த ஆண்டு ஓய்வூதியம் 26 லட்ச ரூபாயையும் நிறுத்தினார்.
வருவாய் சீர்திருத்தங்கள்
வாரன் ஹோஸ்டிங்ஸ் |
கருவூலம் மூர்ஷிதாபாத்திலிருந்து கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது. ஒரு தலைமைக் கணக்கரும் நியமிக்கப்பட்டார். இவ்வாறு கல்கத்தா 1772ல் வங்காளத்தின் தலைநகராகியது. பின்னர் அது பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் தலைநகராயிற்று.
வருவாய் வாரியம் நிலங்களை அவற்றின் உண்மை மதிப்பை அறிந்து கொள்வதற்காக, ஓராண்டுக்குப்பதில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஏலத்துக்கு விட்டது. ஏலத்தில் ஜமீன்தாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இருப்பினும், குடியானவர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக ஒரு சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. தன்னிச்சையான மேல்வரிகளும் அநியாயமான அபராதங்களும் ஒழிக்கப்பட்டன. மேலும் குத்தகையை உயர்த்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் இந்த வருவாய்த்திட்டம் தோல்வியில் முடிந்தது. பல ஜமீன்தார்கள் வரிகட்டத் தவறினார்கள். வருவாய் நிலுவை அதிகரித்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாரன் ஹோஸ்டிங்ஸ் , வாரன், வரலாறு, இந்திய, ஹோஸ்டிங்ஸ், வருவாய், ஹேஸ்டிங்ஸ், முறை, இரட்டையாட்சி, வாரியம், இருப்பினும், மேலும், லட்ச, வங்காளத்தின், ஆங்கிலேய, இந்தியா, கிழக்கிந்திய, சீர்திருத்தங்கள், பொறுப்பை, ஆண்டு, வணிகக்