வாரன் ஹோஸ்டிங்ஸ்
[நந்தகுமார் என்பவர் வங்காளத்தில் செல்வாக்குப் பெற்ற அதிகாரியாவார். பொய் கையெழுத்து என்ற குற்றத்திற்காக கல்கத்தா உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இத்தீர்ப்பில் ஆங்கிலேயச் சட்டம் பின்பற்றப்பட்டது. நந்தகுமாருக்கு எதிராக வாரன் ஹேஸ்டிங்ஸ்சும், தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே என்பவரும் சதி செய்தனர் என்று கூறப்பட்டது.
காசி அரசர் செயித் சிங் மீது வாரன் ஹேஸ்டிங்ஸ் கப்பம் கட்டத் தவறியதாக அதிகப்படியான அபராதம் விதித்தார். பின்னர், அவரை முறையற்ற வகையில் பதவி நீக்கம் செய்தார்.
வங்காள நவாப்பின் அன்னையும், பாட்டியும் அயோத்தி பேகம்கள் எனப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் பறிக்க முயன்ற நவாப்பிற்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் படையுதவி அளித்தார். இது அதிகார வரம்பை மீறிய செயலாகும். ]
வாரன் ஹேஸ்டிங்ஸ் பற்றிய மதிப்பீடு
மனத்திட்பம், பேராற்றல், கடும் உழைப்பு போன்ற குணங்களைக் கொண்ட சிறந்த மனிதராக வாரன் ஹேஸ்டிங்ஸ் திகழ்ந்தார். முகலாயர் காலப் பண்பாட்டில் திளைத்திருந்த வங்காளத்தில் நீண்டகாலம் தங்கியிருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காளம், பாரசீகம் போன்ற கீழ்த்திசை மொழிகளைக் கற்றதோடு, கீழை நாட்டு பழக்க வழக்கங்களையும் வளர்த்துக் கொண்டார். திறமையான நிர்வாகத்தை இந்தியாவில் ஏற்படுத்துவதற்கு இந்தியப் பண்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் வாரன் ஹேஸ்டிங்ஸ் கவனமாக இருந்தார். எனவே, இந்திய மொழிகளைக் கற்பதையும், கலைகளைப் பேணுவதையும் ஆதரித்தார். எதிர்ப்புகள் நிறைந்த சூழ்நிலையில் அவர் மேற்கொண்ட பணிகள் சவால்கள் நிறைந்தவையாகும். புற எதிரிகளை அசாத்திய துணிச்சலுடனும், வற்றாத வலிமையுடனும் எதிர்கொண்ட வாரன் ஹேஸ்டிங்ஸ் உடனிருந்த எதிரிகளை அசாதாரண பொறுமையுடனும் திடமனதுடனும் கையாண்டார். வாரன் ஹேஸ்டிங்ஸ் விட்டுச் சென்ற அடித்தளத்தின்மீது தான் அவருக்குப் பின் வந்தோர் பிரிட்டிஷ் ஆட்சியை நிறுவினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாரன் ஹோஸ்டிங்ஸ் , வாரன், ஹேஸ்டிங்ஸ், வரலாறு, இந்திய, ஹோஸ்டிங்ஸ், சிங், அயோத்தி, வங்காளத்தில், எதிரிகளை, மொழிகளைக், செயித், பேகம்கள், மீது, ஆண்டு, இந்தியா, எட்மண்ட், பர்க், அதிகார, நந்தகுமார்