வாரன் ஹோஸ்டிங்ஸ்
இரண்டாம் ஆங்கிலேய - மைசூர் போர் (1780 - 84)
முதல் ஆங்கிலேய - மைசூர் போர் 1767 - 69 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. பிரிட்டிஷாருக்கு எதிராக ஹைதர் அலி பெரும் வெற்றி பெற்றார். போரின் முடிவில் ஹைதர் அலி மற்றும் பிரிட்டிஷாருக்கிடையே ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் மைசூர் போர் தொடங்கியது. இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போருக்கான முக்கிய காரணங்களாவன:
1 . 1771 ல் மராட்டியர் மைசூரைத் தாக்கியபோது, பிரிட்டிஷார் ஹைதர் அலியுடன் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை மதிக்கத் தவறினர்.
ஹைதர் அலி |
3. ஹைதர் யின் ஆட்சிப் பகுதிக்குள்ளிருந்த பிரெஞ்சு குடியேற்றமான மாஹி என்ற இடத்தை பிரிட்டிஷார் கைப்பற்றினர்.
4. 1779ல் மராட்டியர் மற்றும் ஹைதராபாத் நிசாம் ஆகியோருடன் ஹைதர் அலி பிரிட்டிஷாருக்கு எதிராக ஒரு பெரும்கூட்டிணைவை ஏற்படுத்திக் கொண்டார்.
வடசர்க்கார் மாவட்டங்களிலிருந்த குண்டுரைக் கைப்பற்றுவதற்காக பிரிட்டிஷார் ஹைதர் அலியின் ஆட்சிப்பகுதி வழியாக தமது துருப்புக்களை அனுப்பியதால் போர் தொடங்கியது. 1780ல் ஹைதர் அலி கர்னல் பெய்லி என்பவரை முறியடித்து ஆற்காட்டை கைப்பற்றினார். அதற்கடுத்த ஆண்டில் வாரன் ஹேஸ்டிங்ஸ் தனது அரசியல் திறமையால் கூட்டிணைவை சிதறடித்தார். அவர் நிசாமுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டார். மராட்டியத் தலைவர்களான பான்ஸ்லே மற்றும் சிந்தியா ஆகியோருடனும் சமரசம் செய்து கொண்டு ஹைதர் அலியை தனிமைப்படுத்தினார். 1781 மார்ச் திங்களில் சர் அபர் கூட் பரங்கிப் பேட்டையில் ஹைதர் அலியை முறியடித்தார். 1782 டிசம்பரில் தனது அறுபதாவது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஹைதர் அலி இறந்தார். அவரது புதல்வர் திப்பு சுல்தான் பதவியேற்கும் வரை இச்செய்தி ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாரன் ஹோஸ்டிங்ஸ் , ஹைதர், இந்திய, வரலாறு, மைசூர், போர், வாரன், பிரிட்டிஷார், ஆங்கிலேய, மராட்டியர், ஹோஸ்டிங்ஸ், செய்து, இரண்டாம், தொடங்கியது, அலியின், தனது, அலியை, கொண்டார், வெற்றி, இந்தியா, உடன்படிக்கை, பிரிட்டிஷாருக்கு, எதிராக, பாதுகாப்பு