வாரன் ஹோஸ்டிங்ஸ்
பிட் இந்தியச் சட்டம் (1784)
ஒழுங்கு முறைச் சட்டம் சில குறைபாடுகளைக் கொண்டிருந்தது எனக்கண்டோம். 1784 ஜனவரித் திங்களில் இளையபிட் (பொதுத் தேர்தல்களுக்குப் பின் இங்கிலாந்து பிரதமரானார்) என்பவர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கான வரைவு மசோதாவைக் கொண்டு வந்தார். இரு அவைகளிலும் கடும் வாக்குவாதம் நடைபெற்றபோதிலும், ஏழு மாதங்களுக்குபிறகு அது நிறைவேற்றப்பட்டது. 1784 ஆகஸ்டில் அரச ஒப்புதலும் வழங்கப்பட்டது. இச்சட்டமே, பிட் இந்தியச் சட்டம் என புகழ் பெற்றது.
முக்கிய விதிமுறைகள்
1. ஆறு உறுப்பினர்கள் கொண்ட கட்டுப்பாட்டு வாரியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் இங்கிலாந்து அரசரால் நியமிக்கப்பட்னர்.
2. இயக்குநர்கள் குழுவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
3 இந்திய நிர்வாகத்தில் இச்சட்டம் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. தலைமை ஆளுநரின் அவை உறுப்பினர் எண்ணிக்கை நான்கிலிருந்து மூன்றாக குறைக்கப்பட்டது. இதில் படைத் தளபதியும் அடங்குவார்.
அயலுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை பிட் இந்தியச் சட்டம் சிறப்புமிக்கதாகும். இச்சட்டத்தை நுணுகி ஆய்வு செய்தால், வணிகக் குழுவின் நிர்வாகத்தில் ஒருவிதமான இரட்டைத்தன்மை ஏற்படுத்தப்பட்டதை உணரலாம். இயக்குநர் குழுவின் கட்டுப்பாட்டில் வணிக நடவடிக்கைகளும் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் அரசியல் நடவடிக்கைகளும் விடப்பட்டன. அரசரின் பிரதிநிதியாக கட்டுப்பாட்டு வாரியமும், வணிகக் குழுவின் அடையாளமாக இயக்குநர் குழுவும் திகழ்ந்தன.
வாரன் ஹேஸ்டிங்ஸ் மீதான தேசத்துரோகக் குற்றச்சாட்டு
1784 ஆம் ஆண்டு பிட் இந்தியச் சட்டம் வாரன் ஹேஸ்டிங்ஸ்சைப் பொறுத்தவரை அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.
வங்காள அரசின் கொள்கையைக் கண்டித்து பிரதமர் ஆற்றிய உரை தனது தனிப்பட்ட ஆளுமையை குறை கூறுவதாக வாரன் ஹேஸ்டிங்ஸ் கருதினார். இங்கிலாந்தில் அவரது புகழும் நற்பெயரும் களங்கப்படுத்தப்பட்டது. எனவே, 1785 ஜூன் திங்களில் தமது பதவியைத் துறந்துவிட்டு இந்தியாவிலிருந்து திரும்பினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாரன் ஹோஸ்டிங்ஸ் , இந்திய, வாரன், வரலாறு, சட்டம், பிட், குழுவின், ஹோஸ்டிங்ஸ், கட்டுப்பாட்டு, நிர்வாகத்தில், பொறுத்தவரை, இயக்குநர், ஹேஸ்டிங்ஸ், நடவடிக்கைகளும், வணிகக், திங்களில், வந்தது, ஆண்டு, இந்தியா, இருதரப்பிலும், இந்தியச், கொண்டு, இங்கிலாந்து, முக்கிய