வாரன் ஹோஸ்டிங்ஸ்
1761 ஆம் ஆண்டு மூன்றாம் பானிப்பட்டுப் போருக்குப் பின்பு மராட்டியர்கள் பெரும்பாலும் ஒற்றுமை குன்றி காணப்பட்டனர். பிரிட்டிஷார் தங்களது விரிவாக்கக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இதனை தகுந்த வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர்.
1775 ஆம் ஆண்டு மாதவ ராவ் மற்றும் அவரது சித்தப்பா ரகுநாத ராவ் இருவருக்கிடையே பேஷ்லா பதவிக்காக போட்டி நிலவியது. 1775 மார்ச் திங்களில் பம்பாயிலிருந்த பிரிட்டிஷ் அரசு ரகுநாத ராவுடன் சூரத் உடன்படிக்கையை செய்து கொண்டது. இதன்படி சால்செட், பசீன் பகுதிகளை பிரிட்டிஷாருக்குக் கொடுப்பதாக அவர் வாக்களித்தார், பின்னர் அவர் அதற்குத் தயக்கம் காட்டவே, பிரிட்டிஷார் அப்பகுதிகளைக் கைப்பற்றினர். பம்பாப் அரசின் இந்த நடவடிக்கையை வாரன் ஹேஸ்டிங்ஸ் ஏற்கவில்லை. இச்சிக்கலைத் தீர்ப்பதற்காக வாரன் ஹேஸ்டிங்கஸ் 1776 இல் கர்னல் அப்டன் என்பவரை அனுப்பி வைத்தார் சூரத் உடன்படிக்கையை ரத்து செய்து விட்டு மற்றொரு மராட்டியத் தலைவரான நானா பட்னாவிஸ் என்பவருடன் புரந்தர் உடன்படிக்கையை அவர் செய்து கொண்டார். இந்த உடன்படிக்கைப்படி இரண்டாம் மாதவராவ் பேஷ்வாவாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.பிரிட்டிஷார் சால் செட்டை தக்க வைத்துக் கொண்டதுடன் பெரும்தொகையை போர் இழப்பீடாகப் பெற்றனர்.
ஆனால், தாய்நாட்டு அரசாங்கம் புரந்தர் உடன்படிக்கையை நிராகரித்தது. வாரன் ஹேஸ்டிங்சும் புரந்தர் உடன்படிக்கையை வெற்றுக் காகிதம் எனக் கருதினார். மராட்டியருக்கெதிராக படையெடுக்கவும் அனுமதியளித்தார். இதற்கிடையில் மராட்டியர்கள் பம்பாய் அரசின் துருப்புக்களை முறியடித்தனர்.
1781 ல் வாரன் ஹேஸ்டிங்ஸ் கேப்டன் பாப்ஹாம் என்பவர் தலைமையில் பிரிட்டிஷ் துருப்புக்களை அனுப்பினார். இப்படை மராட்டிய தலைவர் மகாதாஜி சிந்தியாவை பல இடங்களில் முறியடித்து குவாலியரைக் கைப்பற்றியது. 1782 மே திங்களில் வாரன் ஹேஸ்டிங்ஸ் மகாதஜி சிந்தியா இருவருக்குமிடையே சால்பாய் உடன்படிக்கை கையெழுத்தாயிற்று. இதன்படி, சால்செட், பசீன் பகுதிகள் பிரிட்டிஷாருக்கு கிடைத்தன. ரகுநாத ராவுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இரண்டாம் மாதவராவ் பேஷ்வா என ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாரன் ஹோஸ்டிங்ஸ் , வாரன், வரலாறு, உடன்படிக்கையை, இந்திய, ரகுநாத, அவர், செய்து, பிரிட்டிஷார், ஹேஸ்டிங்ஸ், புரந்தர், ஹோஸ்டிங்ஸ், துருப்புக்களை, பசீன், இரண்டாம், அரசின், சால்செட், மாதவராவ், பிரிட்டிஷ், போர், ஆங்கிலேய, இந்தியா, ஆண்டு, மராட்டியர்கள், சூரத், திங்களில், ராவ், இதன்படி