முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » என்ரிக்கோ ஃபெர்மி (கி.பி.1901 - கி.பி.1954)
என்ரிக்கோ ஃபெர்மி (கி.பி.1901 - கி.பி.1954)
உலகின் முதலாவது அணு உலயை வடிவமைத்தவர் என்ரிக்கோ ஃபெர்மி ஆவார். இவர், இத்தாலியில் ரோம் நகரில் 1901 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் அருந்திறன் வாய்ந்த மாணவராகத் திகழ்ந்தார். பிசா பல்கலைக் கழகத்தில் பயின்று தம் 21 ஆம் வயதிலேயே இயற்பியலில் பிஎச்.டி. பட்டம் பெற்றார். 26 ஆம் வயதில் ரோம் பல்கலைக் கழகத்தில் ஒரு பேராசிரியரானார். அதற்கு முன்னரே இவர் தமது முதலாவது முக்கிய ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டிருந்தார். இது, இயற்பியலில் அதிகம் அறியப்படாதிருந்த கதிரியக்க அலை வீச்சுப் புள்ளியியல் என்னும் ஓர் அரிய பிரிவு பற்றியதாகும். அந்தக் கட்டுரையில், இன்று "ஃபெர்மியோன்கள்" என்றழைக்கப்படும் ஒருவகைத் துகள்களின் பெருந்திரட்சிகளின் நடத்தைப் போக்கினை இவர் விவரித்திருந்தார். எலெக்ட்ரான்கள், புரோட்டன்கள், நியூட்ரான்கள் என்னும் மூன்று "கட்டுமானத் தொகுதிகளினால்" வழக்கமான பருப்பொருள்கள் ஆக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றும் ஃபெர்மியான்களேயாகும். எனவே, ஃபெர்மியின் சமன்பாடுகளின் வாயிலாக அணுக்களின் "மையக் கரு" பற்றியும் சில வகை விண்மீன்களின் உட்பகுதியில் நிகழ்வது போன்ற ".....பருப் பொருட் சிதைவு" குறித்தும் உலோகங்களின் குண இயல்புகள் மற்றும் நடத்தைப் போக்கு பற்றியும் நாம் மேலும் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. இவை அனைத்தும் நடைமுறையில் நமக்கு மிகவும் பயன்படக் கூடியனவாகும்.
1933 ஆம் ஆண்டில் "பீட்டாச் சிதைவு" என்னும் ஒருவகை கதிரியக்கம் பற்றிய ஒரு கோட்பாட்டை ஃபெர்மி வகுத்தமைத்தார். இதில், மின் இயக்கமில்லாத சிற்றணுத் துகள்களாகிய "நியூட்ரான்கள்" பற்றியும் வலுவற்ற எதிரெதிர் செயல் விளைவுகள் குறித்தும், முதலாவது அளவீட்டு ஆய்வுரை அடங்கியிருந்தது. இவை இரண்டுமே இன்றைய இயற்பியலில் மிக முக்கியமான விவாதப் பொருள்களாகும். இதுபோன்ற ஆராய்ச்சியைப் பாமர மக்கள் எளிதில் புரிந்து கொள்ள இயலாதெனினும் இந்த ஆராய்ச்சி ஃபெர்மிக்கு உலகின் தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் என்ற புகழை ஈட்டித் தந்தது.
1932 ஆம் ஆண்டில், ஜேம்ஸ் சாட்விக் கஎன்ற பிரிட்டிஷ் இயற்பியலறிஞர் அணு உட்கூறமைவு சார்ந்த 'நியூட்ரான்' என்னும் ஒரு புதிய துகளை கண்டுபிடித்தார். 1934 ஆம் ஆண்டு முதற்கொண்டு, ஃபெர்மி அறியப்பட்டிருந்த வேதியியல் தனிமங்களை நியூட்ரான்களைக் கொண்டு தகர்த்துப் பார்க்கலானார். பல்வேறு வகையான அணுக்களால் நியூட்ரான்களை ஈர்த்துக் கொள்ள முடிகின்றது என்பதும், பல நேர்வுகளில், அத்தகைய 'அணுவியல் உருநிலை மாற்றம்' காரணமாக அணுக்கள் கதிரியக்கம் பெறுகின்றன என்பதையும் இவரது பரிசோதனைகள் காட்டின. நியூட்ரான் மிக வேகமாக இயங்குமாயின், அது அணுவின் மையக் கருவை ஊடுருவிச் செல்வது எளிதாக இருக்கும் என ஒருவர் எதிர்பார்த்திருக்கக்கூடும். ஆனால், இதற்கு நேர்மாறான நிகழ்வு நடப்பதை ஃபெர்மி பரிசோதனைகள் மெய்ப்பித்தன. வேகமாக இயங்கும் நியூட்ரான்களை முதலில் கன்மெழுகு அல்லது தண்ணீர் வழியாகச் செலுத்தி வேகத்தைக் குறைத்தால் அவற்றை அணுக்களால் மிக எளிதாக ஈர்த்துக் கொள்ள முடிகிறது என்பதும் ஃபெர்மியின் சோதனைகளிலிருந்து தெரிய வந்தது. ஃபெர்மியின் இந்தக் கண்டு பிடிப்புதான், அணு உலைகளை நிறுவுவதில் மிக முக்கியமாகப் பயன்படுகிறது. அணு உலைகளில், நியூட்ரான்களின் வேகத்தைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருளை "முனைப்புத் தணிப்பான்" என்று குறிப்பிடுகிறார்கள்.
நியூட்ரான்களின் ஈர்ப்பு பற்றிய ஃபெர்மியின் முக்கியமான ஆராய்ச்சிக்காக 1938 ஆம் ஆண்டில் இவருக்கு இயறபியலுக்கான நோபல் பரிசு வழங்கப் பெற்றது. எனினும், இதற்கிடையில் இத்தாலியில் அவருக்குப் பல தொல்லைகள் தோன்றின. முதலாவதாக, அவரின் மனைவி யூதராக இருந்தார். அப்போது இத்தாலியில் ஆட்சி புரிந்த இத்தாலி வல்லாண்மைக் கட்சி அரசு யூதர்களுக்கு எதிரான பல கடுமையான சட்டங்களைப் பிறப்பித்தது. இரண்டாவதாக முசோலினியின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் கடைப்பிடிக்கப்பட்டு வந்த "பொதுவுடைமை எதிர்ப்பு வல்லாண்மை" என்னும் மிக அபாயகரமான கொள்கைகளை ஃபெர்மி மிக வன்மையாக எதிர்த்தார் நோபல்ர பரிசைப் பெற்றுக் க—‘ளவ்தற்காக 1938 ஆம் ஆண்டில் ஸ்டாக்ஹோம் சென்ற அவர் அதன் பிறகு இத்தாலிக்குத் திரும்பவில்லை. மாறாக, அவர் நியூயார்க் சென்றார். அங்கு கொலம்பியாப் பல்கலைக் கழகம் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரைத் தனது பேராசிரியர் குழுவில் சேர்த்துக் கொள்வதைப் பெருமையாகக் கருதி அவருக்குப் பேராசிரியர் பதவியை அளித்தது. ஃபெர்மி 1944 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடிமகனானார்.
நியூட்ரான்களின் ஈர்ப்பு காரணமாகச் சில சமயம் யுரேனிய அணுக்களில் "கருப்பிளவு" உண்டாகிறது என்பதை, 1939 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லிசேமெய்ட்னர், ஆட்டோ ஹான் ஃபிரிட்ஜ், ஸ்டிராஸ்மன் என்ற மூவரும் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு வெளிவந்தவுடனேயே (வேறுபல முன்னணி இயற்பியல் விஞ்ஞானிகளைப் போலவே) ஃபெர்மி கருப்பிளவுறுகின்ற யுரேனியம் அணு, ஒரு தொடர் வினையைத் தோற்றுவிப்பதற்குப் போதுமான நியூட்ரான்களை வெளிப்படுத்தக்கூடும் என்பதை உணர்ந்தார். மேலும், (வேறு பலரும் கருதியது போன்றே) ஃபெர்மி அத்தகைய தொடர்வினையின் இராணுவ ஆற்றலையும், முன்னரே கண்டு கொண்டார். 1939 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் ஃபெர்மி அமெரிக்கக் கடற்படைத் துறையின€ரைச் சந்தித்து, அணு ஆயுதங்கள் தயாரிப்பதில் அவர்களுக்கு ஆர்வம் உண்டாக்க முயன்றார். எனினும் இதற்குப் பல மாதங்களுக்குப் பின்னர் தான் இது குறித்து குடியரசுத் தலைவர் ரூஸ்வெஸ்ட்டுக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கடிதம் எழுதிய பிறகுதான் அணு ஆற்றலில் அமெரிக்க அரசு ஆர்வம் காட்டத் தொடங்கியது.
இதில் அமெரிக்க அரசு ஆர்வம் காட்டத் தொடங்கியதுமே, தானாகவே நடத்திச் செல்லக் கூடிய ஒரு தொடர் வினையை உண்டாக்குவது இயலுமா என்பதைக் கண்டிறிவதாக அணு ஆற்றலைக் கட்டுப்படுத்தி இயக்கும் முன்மாதிரி அமைவு ஒன்றை உருவாக்குவது விஞ்ஞானிகளின் முதற் கடமையாக அமைந்தது. அப்போது, உலகிலேயே நியூட்ரான்கள் பற்றிய தலையாய வல்லுநராக கஃபெர்மி விளங்கியாலும், பரிசோதனைகளிலும், கோட்பாடுகளிலும் அவர் மிகத் தேர்ந்தவராகத் திகழ்ந்ததாலும், உலகின் முதலாவது அணு உலையை நிறுவுவதற்கான குழுவின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதலில் கொலம்பியாப் பல்கலைக் கழகத்திலும், பின்னர் சிகாகோக பல்கலைக் கழகத்திலும் பணியாற்றினார். ஃபெர்மியின் கண்காணிப்பின் கீழ் சிகாகோவில் வடிவமைக்கப்பட்டு, நிறுவப் பெற்ற முதலாவத அணு உலை, 1942 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாளன்று வெற்றிகரமாகச் செயற்படத் தொடங்கியது. அன்று உண்மையில், "அணுயுகம்" பிறந்தது எனலாம். ஏனெனில் ஓர் அணுத் தொடர்வினை உண்டாக்குவதில் மனித குலம் அன்றுதான் வெற்றி கண்டது. இந்த வெற்றிகரமான சாதனை பற்றிய செய்தி ஒரு சுருக்கமான குழூஉக் குறியீட்டு வாசகத்தில் கிழக்கே அனுப்பப்பட்டது. "இத்தாலிய மாலுமி புதிய உலகில் நுழைந்து விட்டார்" இந்த வெற்றிகரமான சோதனையைத் தொடர்ந்து, அணுகுண்டு தயாரிப்பதற்கான "மன்ஹாட்டன் திட்டம்" முழு வேகத்தில் முடுக்கி விடப்பட்டது. அந்தத் திட்டத்திலும், முதன்மையான அறிவியல் ஆலோசகர் என்ற முறையில் ஃபெர்மி பெரும் பங்கு கொண்டார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஃபெர்மி, சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியரானார். அவர் 1954 ஆம் ஆண்டில் காலமானார். அவருக்குத் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருந்தனர். அவருக்குப் பெருமையளிப்பதற்காகவே நூறாவது வேதியியல் தனிமத்திற்கு "ஃபெர்மியம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் ஃபெர்மி ஒரு முக்கிய மனிதராக விளங்குகிறார். முதலாவதாக, 20 ஆம் நூற்றாண்டில் தலைசிறந்த விஞ்ஞானிகளில் அவரும் ஒருவர் என்பதை மறுப்பதற்கில்லை. மேலும், கோட்பாட்டிலும், பரிசோதனையிலும் அவரைப் போல் தேர்ந்தவராக விளங்கியவர்கள் மிகச் சிலரே. அவருடைய மிக முக்கியமான அறிவியல் சாதனைகளில் மிகச் சில மட்டுமே இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், ஃபெர்மி தம் ஆயுட்காலத்தில் 250-க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இரண்டாவதாக, அணுகுண்டு தயாரிப்பதில் வேறு சிலரும் முக்கிய பங்கு கொண்டிருந்த போதிலும், அதில் தலையாய பொறுப்புக் கொண்டிருந்தவர் ஃபெர்மியே ஆவார்.
எனினும், அணு உலையைக் கண்டுபிடிப்பதில் ஃபெர்மி ஆற்றிய அரும்பணிதான் அவருக்குத் தலையாய முக்கியத்துவத்தை ஈட்டித் தந்தது. அந்தக் கண்டுபிடிப்புக்கான முதன்மையான பெருமை, ஃபெர்மியையே சேர வேண்டும் என்பதில் ஐயத்திற்கிடமில்லை. அவர் முதலில் அணு உலை நிருமாணத்திற்கு அடிப்படையான கோட்பாட்டிற்கு மிகப் பெருந்தொண்டு புரிந்தார். பின்னர் முதலாவது அணு உலையை வடிவமைத்து நிறுவுவதும் அவருடைய நேரடிக் கண்காணிப்பிலேயே வெற்றிகரமாக நடைபெற்றது.
1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு, போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை. எனினும், ஆக்கப் பணிகளுக்கு ஆற்றல் உற்பத்தி செய்வதற்காக ஏராளமான அணு உலைகள் நிறுவப் பெற்றன. எதிர்காலத்தில், ஆற்றல் உற்பத்திக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரமாக அணு உலைகள் அமையக்கூடும். மேலும் சில அணு உலைகள், பயனுள்ள "ஊடுகதிர் ஓரகத் தனிமங்களை" உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. "பொன்னாகம்" எனப்படும் புளூட்டோனியம் என்ற தனிமத்தை உற்பத்தி செய்யும் ஆபத்தான ஆதாரமாகவும் அணு உலைகள் பயன்படுகின்றன. ஏனெனில், அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் பொருள் இந்தப் புளூட்டோனியமே ஆகும். இக்காரணத்தால், அணு உலைகள், மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்ற நியாயமான அச்சமும் நிலவுகிறது. ஆயினும், அணு உலையை ஓர் அற்புதமான கண்டுபிடிப்பாக எவரும் கருதவில்லை. நன்மையானதாயினும், தீமையானதாயினும் ஃபெர்மியின் சாதனை இன்னும் பல ஆண்டுகளுக்கு உலகின் மீது பெருமளவுக்குச் செல்வாக்கைக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 105 | 106 | 107 | 108 | 109 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்ரிக்கோ ஃபெர்மி (கி.பி.1901 - கி.பி.1954), ", ஃபெர்மி, ஆண்டில், அவர், ஃபெர்மியின், உலகின், எனினும், என்னும், உலைகள், பல்கலைக், முதலாவது, பற்றிய, கொள்ள, மேலும், இவர், ஆர்வம், என்பதை, பிறகு, அரசு, உலையை, உற்பத்தி, அறிவியல், அவருக்குப், தலையாய, பின்னர், விஞ்ஞானிகளில், பற்றியும், முக்கிய, இயற்பியலில், இத்தாலியில், முக்கியமான, தலைசிறந்த, முதலில், நியூட்ரான்களை, ஆண்டு, ஒருவர், நியூட்ரான்களின், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்