முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » மா - சே - துங் (கி.பி.1893 - கி.பி.1976)
மா - சே - துங் (கி.பி.1893 - கி.பி.1976)
சீனாவில் பொதுவுடைமைக் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்குக் காரணமாக இருந்தவர் மா-து-சேங் எனும் மாவோ. இந்த மாபெரும் நாட்டின் வரலாற்றின் மிகப் பரந்த செயல் விளைவுடைய தனிச் சிறப்புக்குரிய மாறுதல்களுக்குத் தலைமை தாங்கி நடத்தியவர் அவர்.
சீனாவில் ஹூனான் என்ற கிராமத்தில் 1893 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இவருடைய தந்தை ஓரளவுக்கு வதியான ஒரு குடியானவர். சீனாவை 17 ஆம் நூற்றாண்டு முதல் ஆண்டு வந்த ஷிங் மரபின் அரசு சீர்கேடுற்றிருந்தது. அந்த அரசுக்கெதிராக 1911 இல் ஒரு புரட்சி மூண்டது. அப்போது மா-சே-துங் 18 வயது மாணவராக இருந்தார். இந்தப் புரட்சி மூண்ட சில மாதங்களுக்குள்ளே ஷிங் குடியரசு கவிழ்க்கப்பட்டது. சீனா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த புரட்சியின் தலைவர்களால், சீனாவில் ஒரு நிலையான, ஒற்றுமையான அரசை ஏற்படுத்த முடியவில்லை. இநத புரட்சி நீண்ட காலக் குழப்பத்திற்கும், உள்நாட்டுப் போருக்கும் வித்திட்டது. இந்த நிலைமை 1949 வரையிலும் நீடித்தது. இளைஞர் மா-சே-துங்கை இடதுசாரி அரசியல் கொள்கைகள் மிகவும் கவர்ந்தன. 1920 ஆம் ஆண்டில் அவர் கொள்கைப் பற்று மிகுந்த ஒரு பொதுவுடைமைடவாதியாக விளங்கினார். 1921 ஆம் ஆண்டில் சீனப் பொதுவுடைமைக் கட்சியைத் தோற்றுவித்த 12 பெருந்தலைவர்களுள் ஒருவராக மா-சே-துங் திகழ்ந்தார். எனினும், கட்சித் தலைமையின் உச்ச பீடத்திற்கு அவர் மிக மெதுவாகவே ஏறிக் கொண்டிருந்தார். 1935 ஆம் ஆண்டில் தான் அவரால் கட்சியின் தலைவராக ஆக முடிந்தது.
இதற்கிடையில், ஆட்சியைப் பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி பல எதிர்ப்புகளுக்கிடையில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தது. 1927 ஆம் ஆண்டிலும், 1934 ஆம் ஆண்டிலும் இக்கட்சிக்குப் பெருந்தோல்விகள் ஏற்பட்டன. எனினும், இக்கட்சி எப்படியோ பிழைத்துக் கொண்டது. 1935 ஆம் ஆண்டுக்குப் பிறகு மா-சே-துங் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன் பின் கட்சியின் வலிமை படிப்படியாக வளர்ந்தது. 1974 ஆம் ஆண்டில் அப்போது சியாங்-கே ஷாக் தலைமையிலிருந்த தேசிய அரசை எதிர்த்து ஒரு பெரும் போரைத் தொடங்கும் அளவுக்குப் பொதுவுடைமைக் கட்சி வலிமைப் பெற்றது. இந்தப் போர் ஈராண்டுகள் நீடித்தது. நிலப்பரப்பு முழுவதும் பொதுவுடைமையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
முப்பது ஆண்டுக் காலம் உள்நாட்டுப் போர்களினால் அலைக்கழித்த பின்னரே சீனா, பொதுவுடைமைக் கட்சித் தலைவர் என்ற முறையில் மா-சே-துங்கின் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது சீனாவில் வறுமை தலைவிரித்தாடியது. நாடு வளர்ச்சியடையாமல் மிகவும் பின் தங்கியிருந்தது. பழைய மரபுகளில் ஊறிப் போயிருந்த கோடிக்கணக்கான மக்கள் படிப்பறிவில்லாத குடியானவர்களாக இருந்தனர். ஆட்சியைப் பிடித்தபோது மா-சே-துங்- கிற்கு கூட 56 வயது ஆகியிருந்தது. நவ சீனாவை உருவாக்கும் மாப—ரும் பணி அவர் முன் மலைபோல் எழுந்து நின்றது.
மிகப் பெருஞ்செல்வாக்கினை மா-சே-துங் செலுத்திய ஒரு காலம் தொடங்கியது. அது முதற்கொண்டு, 1976 ஆம் ஆண்டில் மா-சே-துங் இறக்கும் வரையில், அவர் செயற்படுத்திய கொள்கைகள் சீனாவை அடியோடு மாற்றி யமைத்தன. இந்த மாற்றத்தின் ஒரு முக்கியமான அம்சம், நாடு முழுவதும் பொதுவாக நவீன மயமாக்கப்பட்டதாகும். குறிப்பாக, நாட்டின் தொழில் மயமாக்குதல் மிகத் துரிதமாக நடைபெற்றது. பொதுக் கல்வி மிகப் பெருமளவுக்கு விரிவடைந்தது. பொதுச் சுகாதாரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த மாறுதல்கள் முக்கியமானவையாயினும், இதே காலகட்டத்தின் போது வேறு பலநாடுகளிலும் இம்மாறுதல்கள் ஏற்பட்டு வந்தன. எனவே இந்தப் பட்டியலில் மா-சே-துங்கிற்கு ஓர் உயரிய இடத்தை அளிப்பதை நியாயப்படுததுவதற்கு இந்த மாறுதல்கள் மட்டுமே போதுமானவையாகாது.
சீனாவில் பொருளாதார முறையை முதலாளித்துவத்திலிருந்து தம தரும முறைக்கு மாற்றியது பொதுவுடைமை அரசின் இரண்டாவது பெருஞ்சாதனையாகும். அரசியல் ஆட்சியைப் பொறுத்த வரையில் ஈவிரக்கமற்ற ஒரு சர்வாதிபத்திய ஆட்சி முறையில் தான் நிறுவப் பெற்து. அரசின் பிரச்சார எந்திரத்தை இடைவிடாமல் பயன்படுத்தியன் மூலம், அரசியல் பொருளாதாரப் புரட்சியை மட்டுமின்றி, சமூகப் புரட்சியைத் தூண்டுவதிலும் மா-சே-துங் ஓய்வு பெறறார். வரலாறு நெடுகிலும் சீன மக்கள் ஆழ்ந்த குடும்பப் பாசம் மிகுந்தவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் அவர்களுடைய இந்தக் குடும்பப் பாச உணர்வு தீவிர நாட்டுப் பற்றாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் கன்ஃபூசியசின் கொள்கைகளுக்கு எதிராகச் சீன அரசு தீவிரமான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது. அந்தப் பிரச்சாரத்திறகுப் பெருமளவில் வெற்றி கிடைத்திருப்பதாகவும் தோன்றுகிறது.
பொதுவுடைமை அரசின் கொள்கைகளை மா-சே-துங் மட்டுமே தீர்மானித்தார் எனக் கூறமுடியாது. சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலின் செய்தது போன்று, ஒரு தனி மனித ஆதிக்கத்தை மா-சே-துங் ஒரு போதும் ஏற்படுத்தியதில்லை. எனினும், 1949 முதற்கொண்டு 1976 இல் தமது இறப்பு வரையிலும் மா-சே-துங் சீன அரசால் மிக முக்கியமான தலைவராக விளங்கினார் என்பதில் சிறிதும் ஐயமில்லை. சீனாவில் 1950-களில் தொடங்கப் பெற்ற "முன்னோக்கிய பெரும் பாய்ச்சல்" என்ற இயக்கத்திற்கு மூல முதற்காரணமாகக் கருதப்படுவர் மா-சே-துங் ஆவார். பெருமளவுத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு நல்கக் கூடிய சிறிய அளவு உற்பத்தி முறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை தலையாய நோக்கமாகக் கொண்ட இந்த இயக்கம் தோல்வியயைடந்ததாகப் பல நோக்கர்கள் கருதுகிறார்கள். இதனாலேயே இந்த இயக்கம் இறுதியில் கைவிடப்பட்டதாகவும் கருதப்படுகிறது. வேறு பல சீனத் தலைவர்களின் கடும் எதிர்ப்பையும் பெருட்படுத்தாமல் மா-சே-துங் தீவிரமாக ஆதரித்த மற்றொரு திட்டம் 1960-களில் தொடங்கப்பெற்ற "மாபெரும் தொழிலாளர் வர்க்கப் பண்பாட்டுப் புரட்டி" என்பதாகும். இந்தத் திட்டமும் நாட்டில் பெருங்கொந்தளிப்பை ஏற்படத்தியது. மா-சே-துங் அவரது ஆதரவாளர்கள் ஒரு புறமும், நிலை கொண்டு விட்ட பொதுவுடைமைக் கட்சி அதிகார வர்க்கத்தினர் மறுபுறமும் ஒரு வகை உள்நாட்டுப் போரில் ஈடுபடுவதற்கு இந்தத் திட்டம் வழி வகுத்தது எனலாம்.
"முன்னோக்கிய பெரும் பாய்ச்சல்" திட்டம் தொடங்கிய போது மா-சே-துங் 65 வயதை எட்டியிருந்தார். பண்பாட்டுப் புரட்சித் திட்டத்தை செயற்படுத்தத் தொடங்கியபோது அவர் 70 வயதை கடந்திருந்தார். அப்போதுதான், அமெரிக்காவுடன் சுமூf உறவு கொள்ளும் முaற்சிகளும் தொடங்கியிருந்தன.
நகரங்களிலுள்ள தொழில் துறைத் தொழிலாளர்கள் பொதுவுடைமைக் கட்சிக்கு மிக்க வலுவான அடித்தளமாக அமைவார்கள் என மா-சே-துங் முதலில் நம்பினார். இந்த நம்பிக்கை மார்க்சின் சொந்தச் சிந்தனைக்கு முற்றிலும் இணக்கமுடையதாகவே இருந்தது. ஆனால், சீனாவில் மட்டுமாவது பொதுவுடைமைக் கட்சிக்கு ஆதரவு குடியானவர்களிடமிருந்து தான் கிடைக்க முடியும் என்ற முடிவுக்கு 1925 வாக்கில் மா-சே-துங் வந்தார். அதற்கேற்ப அவர் தமது செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டார். தேசியவாதிகளுடன் அவர் மேற்கொண்ட நீண்டகாலப் போராட்டத்தில் கிராமப் பகுதிகளே அவருடன் செயற்களமாக விளங்கியது. அவர் ஆட்சித் தலைவராக நிருவாகம் புரிந்த ஆண்டுகளிலும் இந்தக் கொள்கையே அவர் தீவிரமாகச் செயற்படுத்தினார். எடுத்துக்காட்டாக, ரஷியாவில் ஸ்டாலின் தொழில் வளர்ச்சியை முக்கியமாக வலியுறுத்தி வந்தபோது, சீனாவில் மா-சே-துங் வேளா€ண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டிலேயே அதிகம் கவனம் செலுத்தினார். எனினும் மா-சே-துங்கின் தலைமையின் கீழ் சீனாவில் தொழில் துறை உற்பத்தியும் வியக்கத்தக்க அளவுக்குப் பெருகியது என்றே சொல்ல வேண்டும்.
சமகாலத்து அரசியல் தலைவரின் நீண்டகால முக்கியத்துவத்தை மதிப்பிடுவது சற்றுக் கடினமான காரியந்தான். இந்தப் பட்டியலில் மா-சே-துங் எங்கே இடம் பெற வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு, அவரை மற்ற தலைசிறந்த தலைவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் துணைபுரியும், ஜார்ஜ் வாஷிங்டனுக்கு முன்னதாக இடமளிக்கப்படுகிறது. உள்நாட்டில் மா-சே-துங் மேற்கொண்ட மாற்றங்கள், வாஷிங்டன் செய்த மாற்றங்களை விட மிகவும் அடிப்படையானவை என்பதே இதற்கு முக்கிய காரணம். மேலும் நெப்போலியன், ஹ’ட்லர், மகா அலெக்சாந்தர் ஆகியோருக்கு மிக முந்திய இடமளிக்கப்படுகிறது. அவருடைய நீண்ட காலச் செல்வாக்கு அவர்களுடையதை விட கணிசமான அளவு அதிகமாகவே இருக்கும் என்பதே இதற்குக் காரணம்.
மா-சே-துங்கை லெனினுடன் ஒப்பிடுவதும் பொருத்தமாக இருக்கும். லெனினைவிட மிக நீண்ட காலம் மா-சே-துங் ஆட்சி புரிந்தார். அவர், ரஷ்யாவை விட மிகப் பேரளவு மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டை ஆண்டார். (உண்மையைக் கூறின் அவர் அதிகாரத்திலிருந்த கால நீட்சியைக் கவனத்தில் கொள்ளும் போது, வரலாற்றில் வேறெந்த மனிதரையும் விட மிக அதிகமான எண்ணிக்கையிலான மக்களின் மீது அவர் ஆட்சி செலுத்தினார்). ஆனால், மா-சே-துங்கிற்கு முன்னால் லெனின் வாழ்ந்தார். மா-சே-துங்கின் மீது லெனின் தாக்குறவு மிக அதிகமாக இருந்தது. ரஷியாவில் பொதுவுடைமையை நிறுவியதன் மூலம் சீனாவில் பின்னர் பொதுவுடைமையை நிறுவியதன், மூலம் சீனாவில் பின்னர் பொதுவுடைமயை நிறுவுவதற்கு லெனின் பெருமளவில் வழி அமைத்துத் தந்துவிட்டுச் சென்றார்.
சீனாவின் வரலாற்றில் கூட, மா-சே-துங்கிற்கு இணையாகச் சாதனை புரிந்தவரெனக் கருதத்தப்படத் தக்கவர்கள் பேரரசர் ஷி-ஹூ-வா-தை ஆவார். இருவரும் சீனர்கள். இருவரும் தங்கள் நாட்டில் புரட்சிகரமான மாறுதல்களை உருவாக்கிய சிற்பிகளாகத் திகழ்ந்தார்கள். சீனாவில் பேரரசர் ஷி-ஹூ-வா=-தையின் செல்வாக்கு ஏறத்தாழ 22 நூற்றாண்டுகள் வரை நீடித்திருந்தது. இதனாலேயே மா-சே-துங்கிற்கு முன்னதாக ஷி-ஹூ-வாங்-தைக்கு இ.டமளிக்கிறது. நீண்டகால நோக்கில் மா-சே-துங் ஏற்படுத்திய மாறுதல்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்ககமாயின் அவருடைய செல்வாக்கு எத்துணை காலம் நீடித்திருகூகும் என்பதை நாம் உறுதியாக அறுதியிட்டுக்கூற இயலாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 103 | 104 | 105 | 106 | 107 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மா - சே - துங் (கி.பி.1893 - கி.பி.1976), துங், அவர், சீனாவில், பொதுவுடைமைக், ஆண்டில், இந்தப், துங்கிற்கு, பெரும், மிகவும், அரசியல், தொழில், கட்சி, ஆட்சியைப், மிகப், எனினும், காலம், போது, அரசின், ", செல்வாக்கு, லெனின், திட்டம், மாறுதல்கள், மூலம், ஆட்சி, தான், அப்போது, புரட்சி, சீனாவை, நீண்ட, உள்நாட்டுப், கீழ், தலைவராக, கட்சியின், துங்கின், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்