தமிழ் - தமிழ் அகரமுதலி - விவட்சை முதல் - விழுத்துதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| விவட்சை | பேசவேண்டுமென்ற விருப்பம் ; கருத்து . |
| விவத்து | காண்க : விபத்து . |
| விவத்தை | ஆபத்து ; முடிவு ; ஒழுங்குமுறை . |
| விவதானம் | மறைப்பு ; தடை . |
| விவர்த்தம் | சுற்றிவருதல் ; ஆடுதல் ; ஒரு பொருள் தன் வடிவத்தை விடாமல் வேறு வடிவத்தைக் காண்பிக்கை . |
| விவர்த்தனம் | சுழலல் . |
| விவரணம் | விவரமான குறிப்பு . |
| விவரம் | பகுத்தறிவு ; மலைக்குகை ; துளை ; இடைவெளி ; வரலாற்றுக் குறிப்பு . |
| விவரித்தல் | விரித்துக்கூறுதல் . |
| விவா | பெருமை ; இரவு . |
| விவாகம் | திருமணம் . |
| விவாதம் | தருக்கம் ; நியாயத்தல வழக்கு . |
| விவிதம் | பலவிதம் . |
| விவிலியமதம் | கிறித்தவ சமயம் . |
| விவேகபருவம் | பகுத்தறியும் பருவம் . |
| விவேகம் | பகுத்தறிவு ; புத்திக்கூர்மை ; பாயிரம் . |
| விவேகி | பகுத்தறிவுள்ளவன் . |
| விவேகித்தல் | பகுத்தறிதல் . |
| விவேசனம் | பகுத்தறிவு . |
| விழ | காண்க : விழா . |
| விழத்தட்டுதல் | கீழே விழும்படி தள்ளுதல் ; பிறன் கையிலுள்ளதைத் தட்டி வீழ்த்துதல் . |
| விழம்பு | சோறு . |
| விழல் | விழுதல் ; பயனின்மை ; ஒரு புல்வகை ; காண்க : இலாமிச்சு(சை) . |
| விழலன் | பயனற்றவன் . |
| விழலாண்டி | சோம்பித்திரியும் வீணன் . |
| விழலி | ஒன்றுக்கும் உதவாதவள் . |
| விழலுக்கிறைத்தல் | வீண்பாடுபடுதல் . |
| விழவணி | நற்காலங்களில் அணியும் அலங்காரம் . |
| விழவர் | விழாக் கொண்டாடுவோர் . |
| விழவாற்றுப்படுத்தல் | விழாவை முடிவுசெய்தல் . |
| விழவு | காண்க : விழா ; விளையாட்டு ; அவா ; மிதுனராசி . |
| விழவேடெடுத்தல் | புத்தகத்தைத் திருடிக் கொள்ளுதல் . |
| விழற்கட்டு | புல்வீடு . |
| விழற்கிறைத்தல் | காண்க : விழலுக்கிறைத்தல் . |
| விழா | திருவிழா ; திருமணக் கொண்டாட்டம் ; மங்கலச் சடங்கு . |
| விழாக்கடி | திருநாட்காட்சி . |
| விழாக்கால்கோள் | திருவிழாத் தொடக்கம் . |
| விழாக்கொள்ளுதல் | திருவிழா நடத்துதல் . |
| விழாக்கோள் | திருவிழா நடத்துதல் . |
| விழாக்கோளாளர் | அரசர் முதலியோர் ஆணைப்படி திருவிழா நடத்துவோர் . |
| விழாவணி | திருவிழாச் சிறப்பு ; வீரர் போர்க்கோலம் ; காண்க : விழவணி . |
| விழி | கண் ; அறிவு ; மிண்டை . |
| விழிகண்குருடு | வெளித்தோற்றத்தில் விழியில் மாறுபாடின்றியே கண்தெரியாமை . |
| விழிச்சி | காதுக்குள் வெடிக்கும் கட்டி . |
| விழித்தல் | கண்திறத்தல் ; தூக்கம் தெளிதல் ; எச்சரிக்கையாயிருத்தல் ; கவனித்து நோக்குதல் ; மருண்டு நோக்குதல் ; ஒளிர்தல் ; தெளிவாதல் ; உயிர்வாழ்தல் . |
| விழிதுறை | நீர்த்துறை ; இறங்குதுறை . |
| விழிப்பு | விழிக்கை ; எச்சரிக்கை ; செய்வது தெரியாமல் திகைத்தல் ; சிறந்து விளங்குகை . |
| விழிபிதுங்குதல் | வேலை மிகுதியால் வருந்துதல் . |
| விழியன் | பெருங்கண்ணுடையவன் ; பிதுங்கிய விழியுடையவன் . |
| விழிவாதம் | இமைகளையாட்டும் கண்ணோய் வகை . |
| விழு | சிறந்த ; துன்பமான ; பகல் இரவுகள் நாழிகை அளவில் ஒத்தநாள் . |
| விழக்காடிடுதல் | கூறிடுதல் . |
| விழுக்காடு | வீதம் ; வீழ்கை ; கீழ்நோக்கான பாய்ச்சல் ; பங்கு ; தற்செயல் ; மேல்வருவது ; பொருளின்றிக் கூட்டியுரைக்கபடுஞ் சொல் ; அருத்தாபத்தி . |
| விழுக்கு | மெல்லாது உட்கொள்ளுதல் ; ஊன்விசேடம் ; எண்ணெய்ப் பிசுக்கு . |
| விழுங்குதல் | மெல்லாது உட்கொள்ளுதல் ; கவளீகரித்தல் ; தெளிவின்றிப் பேசுதல் ; வெல்லுதல் ; சொற்களை மழுப்புதல் ; கவர்தல் ; பரவுதல் ; கொல்லுதல் . |
| விழுங்கும்பாம்பு | மதிற்பொறிவகை . |
| விழுச்சிறை | சீரிய சிறைவாழ்க்கை . |
| விழுச்செல்வம் | பெருஞ்செல்வம் . |
| விழுசுமை | பெரும்பாரம் . |
| விழுத்தகை | பிறருக்கில்லாத சிறப்பு . |
| விழுத்தண்டு | பெரிய ஊன்றுகோல் . |
| விழுத்தம் | காண்க : கருஞ்சீரகம் . |
| விழுத்தல் | விழச்செய்தல் ; சாகச்செய்தல் ; களைதல் . |
| விழுத்திணை | உயர்குடி . |
| விழுத்து | இலக்கு . |
| விழுத்துதல் | காண்க : விழுத்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 983 | 984 | 985 | 986 | 987 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விவட்சை முதல் - விழுத்துதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, திருவிழா, பகுத்தறிவு, விழா, நோக்குதல், விழுத்தல், மெல்லாது, உட்கொள்ளுதல், சிறப்பு, விழவணி, குறிப்பு, விழலுக்கிறைத்தல், சொல், நடத்துதல்

