தமிழ் - தமிழ் அகரமுதலி - வில்லடை முதல் - வில வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வில்லடை | இடையூறு ; தடை ; பகைமை . |
| வில்லண்டம் | வலாற்காரம் ; முட்டுப்பாடு . |
| வில்லரணம் | விற்படையாலாகிய காவல் . |
| வில்லவன் | கரும்புவில்லையுடைய மன்மதன் ; விற்கொடியை உடைய சேரன் . |
| வில்லாண்மை | வில்லாற்றல் . |
| வில்லார் | வில்லுடையவர் ; வேடர் . |
| வில்லாள் | விற்றொழிலில் வல்லவன் . |
| வில்லாளன் | விற்றொழிலில் வல்லவன் . |
| வில்லாளி | விற்றொழிலில் வல்லவன் . |
| வில்லி | காண்க : வில்லாளன் ; மன்மதன் ; வீரபத்திரன் ; அருச்சுனன் ; வேடன் ; வில்லிபுத்தூராழ்வார் . |
| வில்லிடுதல் | காண்க : வில்வீசுதல் . |
| வில்லிமை | வில்திறமை . |
| வில்லியர் | வேடர் ; வில்வல்லோர் ; ஒரு சாதியார் . |
| வில்லுவம் | வில்வமரம் . |
| வில்லேப்பாடு | அம்புவிழும் எல்லை . |
| வில்லேருழவர் | வீரர் ; வேடர் ; பாலைநில மக்கள் . |
| வில்லை | வட்டமாயிருப்பது ; மணப்பில்லை ; ஒட்டுத்துணி ; காதணிவகை ; சேவகர் தரிக்கும் வட்டமான உலோகத்தகடு ; கோயில்களில் கிடைக்கும் பட்டைச்சோறு . |
| வில்வட்டம் | விற்றொழில் . |
| வில்வம் | மரவகை ; பெரியமாவிலிங்கம் . |
| வில்வாள் | ஓர் இரம்பவகை . |
| வில்வித்தை | வில்லிலிருந்து அம்பெய்யும் கல்வி . |
| வில்விழா | விற்போர் ; வேடர் தம் சிறுவர்க்கு விற்றொழில் பயிற்றத் தொடங்கும் சடங்கு . |
| வில்வீசுதல் | ஒளிவீசுதல் . |
| விலஃகுதல் | காண்க : விலக்குதல் . |
| விலக்கடி | விலக்கத்தக்கது ; மாறானது ; விலக்காக வுள்ளது ; தடை ; புறம்பாக்குகை . |
| விலக்கணம் | காண்க : விலட்சணம் . |
| விலக்கணன் | சிறப்பியல்புடையவன் . |
| விலக்கம் | விலகியிருக்கை ; மாதவிடாய் ; ஊரை விட்டு நீங்குகை ; வழங்காமல் விலக்குகை ; புறம்பாக்குகை . |
| விலக்கற்பாடு | ஒழிபு . |
| விலக்கியற்கூத்து | ஒரு கூத்துவகை . |
| விலக்கு | வேண்டாததென்று ஒதுக்குகை ; தனி ; சிறப்புவிதி ; தடை ; வீரன் தன்மேல் வரும் அம்புகளைத் தடுக்கை ; மாதவிடாய் ; வழு ; அணிவகை . |
| விலக்குதல் | விலகச்செய்தல் ; கூடாதென்று தடுத்தல் ; தடைசெய்தல் ; அழுத்துதல் ; மாற்றுதல் ; வேலையினின்று தள்ளுதல் ; நீக்கி விடுதல் ; கண்டனம் செய்தல் ; பிரித்தல் . |
| விலக்குருவகம் | உருவகிக்கப்பட்ட பொருளினிடத்து அத் தன்மை இல்லை என்ற விலக்கோடு கூடிவரும் உருவகவணி . |
| விலக்குவமை | உவமேயத்திற்கு உயர்வு தோன்ற உவமானத்திலே ஒப்புடைமைக்கு விலக்காயுள்ள சில தன்மைகள் புலப்படக் கூறும் அணிவகை . |
| விலகுதல் | நீங்குதல் ; பின்னிடுதல் ; ஒதுங்குதல் ; இடம்விட்டுப் பெயர்தல் ; ஒழுங்கு தவறுதல் ; ஒளிவிடுதல் ; எறிதல் ; விட்டு நீங்குதல் ; பிரிதல் ; அசைதல் ; செல்லுதல் ; தூரத்தில் இருத்தல் ; மாதவிடாயாதல் . |
| விலங்கரசு | அரிமா . |
| விலங்கரம் | ஒரு வாளரவகை . |
| விலங்கல் | குறுக்காக வளர்ந்திருத்தல் ; மலை ; கலங்கனீர் ; சுவரிதத்தை அடுத்த அனுதாத்தங்களைச் சேர்த்துக் கூறும்போது உள்ள சுரம் ; பண்மாறி நரம்பிசைக்கை . |
| விலங்கி | வேலி . |
| விலங்கினர் | பகைவர் . |
| விலங்கு | குறுக்கானது ; மாவும் புள்ளும் ; மான் ; கைகால்களில் மாட்டப்படுந் தளை ; வேறுபாடு ; தடை ; உயிர்மெய்யெழுத்துகளில் இ , ஈ , உ , ஊ முதலிய உயிர்களைக் குறிக்கும் அடையாளமாக மேலும்கீழும் உள்ள வளைவு ; குன்று ; உடல் . |
| விலங்குதல் | குறுக்கிடுதல் ; மாறுபடுதல் ; நீங்குதல் ; பின்னிடுதல் ; ஒதுங்குதல் ; இடம்விட்டுப் பெயர்தல் ; பிரிதல் ; ஒழுங்கு தவறுதல் ; ஒளிவிடுதல் ; தடுத்தல் ; களைதல் ; கொல்லுதல் ; அழித்தல் ; எறிதல் ; செலவிடுதல் . |
| விலங்குநர் | விலகியிருப்பவர் ; விலக்குபவர் . |
| விலங்குபாய்தல் | குறுக்குப்பாய்தல் . |
| விலங்குபோடுதல் | கைகால்களில் தளையிடுதல் . |
| விலங்கூண் | விலங்குகட்கு உணவிடும் அறச்செயல் . |
| விலட்சணம் | சிறப்பியல்பு ; மேன்மை ; இலட்சணத்தோடு கூடாமை . |
| விலட்சணன் | பேரழகன் . |
| விலம் | அகில் ; குகை ; பள்ளம் ; துளை ; பொந்து . |
| விலம்பம் | தாமதம் ; இலயவகை . |
| விலம்பனம் | தாமதம் ; இலயவகை . |
| விலயம் | அழிவு ; உலகின் முடிவு . |
| விலர் | மரவகை . |
| விலவிலத்தல் | அச்சத்தால் நடுங்குதல் ; மிகவும் வலியிழத்தல் ; நெருக்கமின்றியிருத்தல் . |
| விலவு | மார்பின் பக்கம் ; காண்க : விலாவெலும்பு . |
| வில | மார்பின் பக்கம் ; காண்க : விலாவெலும்பு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 981 | 982 | 983 | 984 | 985 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வில்லடை முதல் - வில வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வேடர், வல்லவன், நீங்குதல், விற்றொழிலில், எறிதல், பிரிதல், ஒளிவிடுதல், ஒழுங்கு, பெயர்தல், உள்ள, தவறுதல், கைகால்களில், பக்கம், விலாவெலும்பு, மார்பின், இலயவகை, தாமதம், இடம்விட்டுப், ஒதுங்குதல், விலக்குதல், புறம்பாக்குகை, மரவகை, விற்றொழில், வில்வீசுதல், விலட்சணம், மாதவிடாய், மன்மதன், பின்னிடுதல், தடுத்தல், அணிவகை, விட்டு, வில்லாளன்

