தமிழ் - தமிழ் அகரமுதலி - விலாக்கொடி முதல் - விவசாயம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| விலாக்கொடி | விலாவெலும்பு . |
| விலாங்கு | ஒரு மீன்வகை . |
| விலாசம் | முகவரி , கடிதம் , பெற்றுக்கொள்பவரின் பெயர் , இருப்பிடம் முதலிய குறிப்பு ; அழகு ; காமக்குறிப்போடு கூடிய செய்கை ; கூச்சம் ; நாடகநூல் ; வணிகர்களால் பண்டங்களிற் குறிக்கப்படும் விலைக்குறியீடு ; அகலம் ; வாழை ; ஒரு நூல்வகை ; மரவகை . |
| விலாசனை | மகளிர் விளையாட்டு . |
| விலாசி | காமன் ; சந்திரன் ; சிவன் ; திருமால் ; பாம்பு ; தீ . |
| விலாசினி | பெண் ; கெட்ட நடத்தை யுடையவள் ; விலைமகள் . |
| விலாசுதல் | அழகுற அணிதல் ; முற்றுந் தோல்வியுறச் செய்தல் ; வலுவாக அடித்தல் . |
| விலாடித்தல் | எண்ணைப் பிரித்தல் ; இரட்டைவரி கொடுத்தல் ; பலமடங்கு கொடுத்தல் . |
| விலாத்தோரணம் | காண்க : விலாவெலும்பு . |
| விலாப்புடை | காண்க : விலாப்புறம் . |
| விலாப்புடைத்தல் | உண்ட உணவின் நிறைவால் இருபக்க விலாப்புறமும் வீங்குகை . |
| விலாப்புறம் | மார்பின் பக்கம் . |
| விலாபம் | தூக்கத்தில் அழுதல் ; அழுதல் . |
| விலாமிச்சை | ஒரு நறுமணப் புல்வகை . |
| விலாய் | சிரமம் ; சண்டை . |
| விலாவணை | அழுகை . |
| விலாவம் | அழுகை . |
| விலாவலக்கு | காண்க : விலாவெலும்பு . |
| விலாவித்தல் | அழுதல் . |
| விலாவெலும்பு | மார்பின் பக்கவெலும்பு . |
| விலாவொடி | விலாப்பக்கம் ஒடியும்படி சிரிக்குஞ் சிரிப்பு . |
| விலாழி | குதிரை வாய்நுரை ; யானைத் துதிக்கை உமிழ்நீர் . |
| விலாளம் | பூனை ; ஆண்பூனை . |
| விலை | விற்பனைத்தொகை ; விற்கை ; மதிப்பு . |
| விலைக்கணிகை | காண்க : விலைமகள் . |
| விலைக்காமர் | காண்க : விலைமகள் . |
| விலைகட்டுதல் | பெறுமானத் தொகையை உறுதிப்படுத்துதல் . |
| விலைகுறித்தல் | விலைமதித்தல் . |
| விலைகூறுதல் | பண்டத்தின் விலையைச் சொல்லுதல் ; விலையைப் பலமுறையுஞ் சொல்லுதல் . |
| விலைகொடுத்துயிர்காத்தல் | கொல்லப்படும் உயிர்களைப் பணங்கொடுத்து உயிர்மீட்கும் அறச்செயல் . |
| விலைகொள்ளுதல் | விலைக்கு வாங்குதல் ; அதிக விலையுடையதாதல் . |
| விலைகோள் | கிரயமதிப்புப் பெறுகை ; சிப்பிமுத்தின் குணங்களுள் ஒன்று . |
| விலைச்சரக்கு | விலைப்படுத்த வைத்திருக்கும் பண்டம் . |
| விலைச்சேரி | பலபண்டம் விற்குமிடம் . |
| விலைசவுத்தல் | விலைகுறைதல் . |
| விலைத்தீட்டு | விலையாவணம் . |
| விலைதீர்த்தல் | விலையை உறுதிப்படுத்தல் . |
| விலைதீர்தல் | விலை உறுதியாதல் . |
| விலைநலப்பெண்டிர் | பரத்தையர் . |
| விலைப்பட்டி | விற்ற பண்டங்களின் விலைக்குறிப்பு ; விற்பனைக் கணக்கு . |
| விலைப்படுதல் | விற்கப்படுதல் . |
| விலைப்பண்டம் | காண்க : விலைச்சரக்கு . |
| விலைப்பலி | பயன்கருதித் தெய்வங்கட்கிடும் பலி . |
| விலைபெறுதல் | காண்க : விலைபோதல் ; மதிப்பு மேம்படுதல் . |
| விலைபோதல் | விலைப்படல் . |
| விலைமகள் | தாசி , பொதுமகள் . |
| விலைமாது | தாசி , பொதுமகள் . |
| விலையாட்டி | பண்டம் விற்பவள் . |
| விலையாள் | அடிமை . |
| விலையாளன் | பண்டம் விற்போன் . |
| விலையிடுதல் | விற்பனைத்தொகை குறித்தல் . |
| விலைவன் | கூலியின்பொருட்டாக ஒன்றைச் செய்பவன் . |
| விலைவாசி | கிரயவளவு . |
| விலைவிழுதல் | கிரயத்தொகை குறைதல் . |
| விலைவைத்தல் | காண்க : விலைகுறித்தல் . |
| விலோசனம் | கண் ; பார்வை ; உட்கருத்து . |
| விலோதம் | பெண்மயிர் ; மயிர்க்குழற்சி ; துகிற்பெருங்கொடி . |
| விலோதனம் | பெருங்கொடி ; துகிற்கொடி ; கண் . |
| விலோபனம் | அழிவு ; இழுத்தல் ; கலக்குதல் ; புகழ்ச்சி ; மயக்கம் . |
| விலோமன் | வருணன் . |
| விவகரித்தல் | நியாயஞ் சொல்லுதல் ; விரித்துக் கூறுதல் ; வாதஞ்செய்தல் . |
| விவகாரம் | நியாயத்தல வழக்கு ; வாதஞ் செய்தல் ; நடத்தை ; நியாயத்தல வழக்குச் சம்பந்தமான அறநூற் பகுதி . |
| விவகாரி | நியாயத்தலத்தில் வழக்காடுவோன் ; செய்திகளை நன்றாய் அறிந்து பேசுபவன் . |
| விவகாரிகம் | விவகார சம்பந்தமுடையது ; வழக்கம் . |
| விவசம் | தன்வயமிழத்தல் ; ஆன்மாவின் விடுதலைநிலை . |
| விவசாயம் | வேளாண்மை ; வாணிகம் ; தொழில் ; முயற்சி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 982 | 983 | 984 | 985 | 986 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விலாக்கொடி முதல் - விவசாயம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, விலாவெலும்பு, விலைமகள், அழுதல், சொல்லுதல், பண்டம், விலைச்சரக்கு, விலைபோதல், பொதுமகள், தாசி, விலைகுறித்தல், நியாயத்தல, விலை, கொடுத்தல், செய்தல், நடத்தை, விலாப்புறம், மார்பின், விற்பனைத்தொகை, அழுகை, மதிப்பு

