தமிழ் - தமிழ் அகரமுதலி - விசிறுதல் முதல் - விஞ்சம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
விசிறுதல் | விசிறியால் காற்றெழுப்புதல் ; வாள் முதலியவற்றை வீசுதல் ; வலை முதலியவற்றை விரித்தெறிதல் ; சுழற்றுதல் ; சொரிதல் ; வெளித்தள்ளுதல் ; போக்குதல் ; கை முதலியன வீசுதல் ; விசிறியால் காற்றடிக்கச் செய்தல் . |
விசு | மேட துலா இராசிகளில் சூரியன் புகும்காலம் ; அறுபதாண்டுக்கணக்கில் பதினைந்தாம் ஆண்டு . |
விசுக்கிடுதல் | வெறுப்புக்கொள்ளுதல் ; மன வருத்தங் கொள்ளுதல் . |
விசுக்கு | வெறுப்பு . |
விசுத்தம் | மிகு தூய்மை . |
விசுத்தி | ஆறாதாரத்துள் ஒன்றான அடிநாவிடம் ; பந்தநீக்கம் ; ஐயம் ; திருத்தம் ; தூய்மை ; ஒப்பு . |
விசுப்பலகை | காண்க : விசிப்பலகை . |
விசும்பு | வானம் ; தேவலோகம் ; மேகம் ; திசை ; வீம்பு ; செருக்கு . |
விசும்புதல் | வெறுப்புடன் விலக்குதல் ; கயிறு முதலியவற்றைச் சுண்டியிழுத்தல் . |
விசும்புவில் | சோதிச்சக்கரம் , வானவட்டம் . |
விசும்பேறு | இடியேறு . |
விசுவகுத்தன் | உலகத்தைக் காப்பவன் . |
விசுவசித்தல் | நம்புதல் ; அன்புசெய்தல் . |
விசுவதேவர் | தேவசாதிவகையினர் ; சிவபெருமான் . |
விசுவநாதன் | எப்பொருட்குமிறைவன் ; காசியிலெழுந்தருளியுள்ள சிவபெருமான் . |
விசுவநாள் | உத்தராடநாள் . |
விசுவம் | எல்லாம் ; உலகம் ; நெடுமால் ; சுக்கு ; சமராத்திரம் ; காண்க : அதிவிடையம் . |
விசுவம்பரன் | எல்லாவற்றையும் தாங்குபவனான கடவுள் ; திருமால் ; இந்திரன் . |
விசுவம்பரை | பூமி . |
விசுவரூபம் | பேருருவம் ; கோயிலிலே கடவுளின் நிலை ; பள்ளியெழுச்சிக்காலத்துச் செய்யும் வணக்கம் . |
விசுவரூபன் | உலகம் அனைத்துமாயுள்ள கடவுள் ; திருமால் . |
விசுவன் | கடவுள் ; சீவான்மா . |
விசுவாசகன் | நம்பிக்கையுள்ளவன் . |
விசுவாசகாதகன் | நம்பிக்கைக்கேடு செய்பவன் . |
விசுவாசம் | நம்பிக்கை ; தெய்வநம்பிக்கை ; அன்பு ; அக்கறை ; பாசம் ; உண்மை . |
விசுவாசி | நம்பிக்கையுள்ளவன் ; தெய்வ நம்பிக்கையுள்ளவன் ; செய்ந்நன்றி மறவாதவன் ; அன்புள்ளவன் ; நாய் ; வேங்கை என்னும் மரம் . |
விசுவாசித்தல் | நம்புதல் ; அன்புசெய்தல் . |
விசுவாத்துமன் | கடவுள் . |
விசுவாவசு | ஒரு கந்தருவன் ; அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தொன்பதாம் ஆண்டு . |
விசுவான்மா | நான்முகன் ; கடவுள் . |
விசுவேசன் | உலக நாயகன் ; காசியில் கோயில் கொண்டுள்ள சிவபிரான் . |
விசுவேசுரன் | உலக நாயகன் ; காசியில் கோயில் கொண்டுள்ள சிவபிரான் . |
விசுவேசுவரி | பார்வதி . |
விசுளி | கள் . |
விசூகை | தலைச்சுழற்சி மிகுவிக்கும் நோய்வகை . |
விசேடணம் | அடைமொழி . |
விசேடதீட்சை | தீட்சை மூன்றனுள் மாணாக்கனைச் சிவபூசை செய்தற்குத் தகுதியாக்கும் இரண்டாம் தீட்சை . |
விசேடம் | மேன்மை , சிறப்பு ; அடைமொழி ; ஒரு பொருளை மேம்படக் கூறும் அணிவகை ; சொற்பொருள் தருதல் ; சிறப்பாக நடைபெறும் விருந்துச் சடங்கு முதலியன ; மிகுதி ; வகை ; சிறப்பியல் ; முக்கியமான செய்தி . |
விசேடித்தல் | சிறப்பித்தல் ; அடைகொடுத்துக் கூறுதல் ; சிறப்பாதல் ; மிகுதியால் . |
விசேடியம் | அடையடுத்த பொருள் . |
விசை | வேகம் ; விரைவு ; நீண்டு சுருங்குந் தன்மை ; எந்திரம் ; பலம் ; பொறி ; பக்கம் ; பற்றுக்கோடு ; மரவகை ; வெற்றி ; தடவை . |
விசைக்கம்பு | நெய்வார் கருவியுள் ஒன்று . |
விசைக்காற்று | ஒருவன் விரைந்துசெல்லும் விசையினால் உண்டாகும் காற்று . |
விசைக்கொம்பு | தாழ வளைத்துவிட்டதும் மீண்டு மேற்கிளம்பும் மரக்கிளை . |
விசைகொள்ளுதல் | விரைதல் ; நீண்டு சுருக்குந் தன்மையாதல் . |
விசைத்தடி | காண்க : விசைக்கம்பு ; உயிரினங்களைப் பிடிக்கும் பொறியின் ஒரு பகுதி . |
விசைத்தல் | விரைவுபண்ணுதல் ; வீசுதல் ; துள்ளுதல் ; சிதறுதல் ; கோபப்படுதல் ; கடுமையாதல் . |
விசைதிறத்தல் | வேகமாக வெளிப்படுதல் . |
விசையசாரதி | கண்ணபிரான் . |
விசையம் | கருப்பஞ்சாறு ; கருப்புக்கட்டி ; பாகு ; வெற்றி ; வருகை ; வீற்றிருப்பு ; குதிரையின் மார்பில் காணப்படும் இரட்டைச்சுழி ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று ; தேவவிமானம் ; பொருள் ; பரிவேடம் ; சூரியமண்டலம் ; வையம் . |
விசையன் | காண்க : விசயன் ; வெற்றியாளன் . |
விசையேற்றுதல் | மூட்டிவிடுதல் ; எந்திரம் முதலியவற்றைத் தொழிற்படுத்தத் தயார்ப்படுத்தி வைத்தல் . |
விஞ்சதி | இருபது . |
விஞ்சம் | விந்தியமலை . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 968 | 969 | 970 | 971 | 972 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விசிறுதல் முதல் - விஞ்சம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கடவுள், காண்க, நம்பிக்கையுள்ளவன், வீசுதல், அடைமொழி, தீட்சை, சிவபிரான், கொண்டுள்ள, பொருள், எந்திரம், ஒன்று, விசைக்கம்பு, வெற்றி, கோயில், நீண்டு, நாயகன், அன்புசெய்தல், நம்புதல், தூய்மை, ஆண்டு, சிவபெருமான், உலகம், முதலியன, விசிறியால், திருமால், முதலியவற்றை, காசியில்