தமிழ் - தமிழ் அகரமுதலி - விடங்கம் முதல் - விடாய்த்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| விடங்கம் | புறாக்கூடு ; கொடுங்கை ; சுவர்ப்புறத்து வெளிவந்துள்ள உத்திரக்கட்டை ; வீட்டின் முகடு ; வீதிக்கொடி ; உளியினாற் செய்யப்படாது இயற்கையாயமைந்த இலிங்கம் ; அழகு ; ஆண்மை ; இளமை . |
| விடங்கர் | சிறுவழி ; முதலை . |
| விடங்கன் | தானே உண்டான இலிங்கம் ; நல்லுருவமுடையவன் ; காமுகன் ; வம்பளப்பவன் . |
| விடங்கு | அழகு ; அணிகலன்களின் உறுப்பு ; இன்பக்குறிப்பு . |
| விடங்கொல்லி | சிறியாநங்கைப்பூண்டு . |
| விடத்தர் | முள்ளுடைய மரவகை . |
| விடத்தேதொடரி | ஒரு மருந்துமூலிகை ; முள்ளுடைய மரவகை . |
| விடத்தேர் | ஒரு மருந்துமூலிகை ; முள்ளுடைய மரவகை . |
| விடத்தேரை | ஒரு மருந்துமூலிகை ; முள்ளுடைய மரவகை . |
| விடதம் | முகில் ; துரிசு . |
| விடதரம் | பாம்பு ; மேகம் ; துரிசு . |
| விடதரன் | சிவபிரான் . |
| விடதாரி | காண்க : விடகாரி . |
| விடதாலி | பூரான் . |
| விடப்பு | நிலப்பிளவு . |
| விடபகதி | குதிரைநடை ஐந்தனுள் ஒன்று . |
| விடபம் | எருது ; இடபராசி ; மரக்கொம்பு ; பெருந்தூறு ; தூண் ; தளிர் ; அண்டத்திலுள்ள விதை ; விரிவடைதல் . |
| விடபி | மரப்பொது ; அத்திமரம் . |
| விடம் | நஞ்சு ; பாடாணம் ; கேடுவிளைப்பது ; தேள் ; சுக்கின் தோல் ; நீர் ; தாமரைநூல் ; காண்க : அதிவிடையம் ; கயமைத்தனம் ; மரக்கொம்பு ; மலை ; இடம் ; ஐந்துப்புள் ஒன்று ; நச்சுப்பூடுவகை . |
| விடம்பம் | உள்ளொன்று புறம்பொன்றான தன்மை ; உண்மைபோன்று நடிக்கும் நடிப்பு ; வேடம்பூணுகை . |
| விடம்பனம் | நடிப்பு ; நிந்தை ; தொல்லை . |
| விடம்பு | காண்க : விடப்பு . |
| விடம்பை | பிளப்பு . |
| விடமம் | சமமின்மை ; கரடுமுரடு ; இசைவற்றது ; தாளவங்கங்கள் விரவிவரும் நிலை ; குறும்பு ; சங்கடம் ; அழுத்தமின்மை ; அச்சம் . |
| விடமரம் | எட்டிமரம் . |
| விடமன் | குறும்புசெய்பவன் . |
| விடமி | குறும்புசெய்பவள் . |
| விடமுள் | தேள் . |
| விடமூங்கில் | ஒரு செடிவகை . |
| விடயம் | செயல் ; புலன் ; புலனால் அறியும் பொருள் ; நூல் நுதலிய பொருள் ; காரணம் ; நாடு ; பயன் ; காமவின்பம் ; சுக்கிலம் ; பாக்குடன் கூடிய வெற்றிலை மடிப்பு ; அடைக்கலம் . |
| விடயி | ஐம்பொறி ; அரசன் . |
| விடயித்தல் | பொறிகள் புலனைப் பற்றுதல் . |
| விடர் | நிலப்பிளப்பு ; மலைப்பிளப்பு ; மலைக்குகை ; முனிவர் இருப்பிடம் ; காடு ; பெருச்சாளி . |
| விடர்வு | காண்க : விடப்பு . |
| விடரகம் | மலைக்குகை ; மலை . |
| விடரவன் | பூனை . |
| விடரளை | மலைப் பிளப்பிடம் . |
| விடரி | மலை . |
| விடருதம் | பூனை ; பாம்பு . |
| விடல் | முற்றும் நீங்குகை ; ஊற்றுகை ; குற்றம் . |
| விடலம் | உள்ளி ; குதிரை ; நஞ்சு . |
| விடலி | கெட்டபெண் ; பூப்புடையாள் ; பன்னீரகவையுள்ள பெண் ; மலடி ; புல்வகை ; மணத்துக்குமுன் பூப்படைந்தாள் . |
| விடலை | பதினாறு முதல் முப்பது ஆண்டுவரையுள்ளவன் ; திண்ணியோன் ; பெறுமையிற் சிறந்தோன் ; வீரன் ; பாலைநிலத் தலைவன் ; மருதநிலத் தலைவன் ; மணவாளன் ; ஆண்மகன் ; இளங் காளைமாடு ; சூறைத்தேங்காய் ; இளநீர் . |
| விடவல்லி | ஒரு செடிவகை . |
| விடவி | மரம் . |
| விடவிடெனல் | குளிர் முதலியவற்றால் உண்டாகும் நடுக்கக்குறிப்பு ; சுறுசுறுப்பாயிருத்தற்குறிப்பு ; மெலிவுக்குறிப்பு . |
| விடவு | நிலப்பிளபப்பு ; கயமைத்தன்மை . |
| விடன் | காமுகன் ; கள்ளக்கணவன் ; வீரன் . |
| விடாக்கண்டன் | பிடிவாதமாக நின்று ஒன்றை நிறைவேற்றுபவன் . |
| விடாணம் | விலங்கின் கொம்பு . |
| விடாணி | கொம்புள்ளது ; யானை . |
| விடாதம் | மயக்கம் . |
| விடாதவாகுபெயர் | இலக்கணை மூன்றனுள் வாசகத்தின் பொருட்கும் இயைபுற நிற்கும் இலக்கணை . |
| விடாந்தகன் | பாற்கடலிலுண்டாகிய நஞ்சைக் கெடுத்தவனாகிய சிவபிரான் . |
| விடாப்படை | கையினின்றும் விடுபடாத வாள் ; குந்தம் போன்ற ஆயுதம் . |
| விடாப்பிடி | பிடித்த பிடி ; உறுதியாகப் பற்றுகை ; உறுதியாக நிற்கை ; பிடிவாதம் ; மாறாமல் ஒரே நிலையி லிருக்கை . |
| விடாமழை | இடையீடின்றிப் பெய்யும் மழை . |
| விடாய் | வேட்கை ; ஆசை ; களைப்பு ; விடுமுறைநாள் ; வெப்பம் . |
| விடாய்த்தல் | வேட்கையுறுதல் ; களைப்படைதல் ; விரும்புதல் ; செருக்குக்கொள்ளுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 970 | 971 | 972 | 973 | 974 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விடங்கம் முதல் - விடாய்த்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், மரவகை, காண்க, முள்ளுடைய, விடப்பு, மருந்துமூலிகை, நடிப்பு, பொருள், செடிவகை, வீரன், இலக்கணை, தலைவன், தேள், பூனை, மலைக்குகை, ஒன்று, துரிசு, காமுகன், அழகு, பாம்பு, சிவபிரான், மரக்கொம்பு, இலிங்கம், நஞ்சு

